ஏப்ரல் 22, 2021, 4:36 மணி வியாழக்கிழமை
More

  இன்று லீவு தராத நிறுவனங்கள் மீது புகார் அளிக்கக் கட்டுபாட்டு அறை!

  leave
  leave

  சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இன்றைய தினம், விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து கட்டுப்பாட்டு அறைகளுக்கு புகார் அளிக்கலாம் என்றுதொழிலாளர் ஆணையர் மா.வள்ளலார் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துகடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள்,மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி, சுருட்டு தயாரிப்பு நிறுவனங்கள், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வாக்களிக்க வசதியாக இன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று அனைத்து வேலை அளிப்பவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

  இன்றைய தினம் விடுமுறை அளிக்கத் தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து புகார் அளிக்கமாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

  அதன்படி, மாநில அளவிலானகட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பாளர் பா.மாதவன் – 9487269270, தொழிலாளர் துணை ஆணையர் டி.விமலநாதன் – 9442540984, தொழிலாளர் உதவி ஆணையர் ஓ.ஜானகிராமன் – 8610308192, தொழிலாளர் உதவி ஆணையர் எம்.மணிமேகலை – 9444647125, தொழிலாளர் உதவி ஆணையர் எஸ்.பி.சாந்தி – 7305280011 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »