ஏப்ரல் 14, 2021, 1:38 காலை புதன்கிழமை
More

  நிர்வாணமாக்கி சந்தையில் நிறுத்துவேன்.. செல்போன் டவரில் ஏறி பெண் வேட்பாளர் தர்ணா!

  veeralakshmi - 1

  தேர்தல் அன்று பெண் ஒருவர் செய்த தர்ணா போராட்டம் பல்லாவரம் தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கி.வீரலட்சுமி, தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பின் நிறுவனரான இவர், பல்லாவரம் தொகுதியில் ‘மை இந்தியா பார்ட்டி’ வேட்பாளராக போட்டியிடுகிறார்.

  இந்நிலையில், தேர்தல் பரப்புரையின் போது வீரலட்சுமியின் வாட்ஸ்-அப் நம்பருக்கு மர்ம நபர் ஒருவர் ஆபாச வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

  இதனையடுத்து சங்கர் நகர் போலீசாரிடம் வீரலட்சுமி புகார் ஒன்றை அளித்தார்., புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  இதை குறித்து பேசிய வீரலட்சுமி “என்னக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபரை 3 நாட்களில் கைது செய்யாவிட்டால், அவரை நானே கண்டுபிடித்து, நிர்வாணமாக்கி பல்லாவரம் சந்தையில் கட்டி வைத்து, அதை வீடியோவாக எடுப்பேன் என்று மேலும் அந்த காட்சியை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்றும் ஒரு வீடியோ பதிவையும் சமூக வலைதளத்தில் வீரலட்சுமி பதிவிட்டிருந்தார்.

  Veera lakshmi - 2

  இந்நிலையில், சம்பந்தப்பட்ட நபரை 20 நாட்களாகியும் போலீஸார் கைது செய்யவில்லை இதனால் ஆத்திரமடைந்த அவர் இதை கண்டிக்கும் விதமாக நேற்று காலை சென்னை விமான நிலையம் அருகே உள்ள 100 அடி செல்போன் டவர் மீது ஏறி ஆபாச வீடியோஅனுப்பியவரை கைது செய்யும் வரை கீழே இறங்க மாட்டேன் என்று தர்ணாவில் ஈடுபட்டார்.

  இந்நிலையில், போலீசாரும் கட்சி நிர்வாகிகளும் மர்ம நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அவரை சமாதானப்படுத்தி இறங்க வைத்தனர். வாக்குப்பதிவு நாளில் பெண் வேட்பாளர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி தர்ணாவில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  two × three =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,107FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »