ஏப்ரல் 14, 2021, 12:52 காலை புதன்கிழமை
More

  கொரோனா: மதுரையில் 800 படுக்கைக்கு டன் கேர் சென்டர்!

  corono - 1

  மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதால் மீண்டும் ‘கேர் சென்டர்’கள் துவங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக 800 படுக்கைகளுடன் பிரமாண்ட ‘கேர் சென்டர்’ ஒன்று அமைகிறது.

  மாவட்டத்தில் இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு 100ஐ கடந்து விட்டது. சிகிச்சை பெறுவோர் விகிதம் கணிசமாக உயர்கிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்கும் பணி நடக்கிறது.

  தற்போது 700க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த முறை தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில், லேசான கவனிப்பு தேவைப்படுவோர் தோப்பூர் மருத்துவமனையில், அறிகுறியின்றி பாதிக்கப்பட்டோர் கொரோன கேர் சென்டர் மற்றும் வீட்டுத் தனிமையில் அனுமதிக்கப்பட்டனர்.

  care center - 2

  தற்போது மீண்டும் கொரோனா ‘கேர் சென்டர்’களை துவங்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

  முதற்கட்டமாக பல்கலை அருகே வடபழஞ்சி எல்காட் நிறுவன கட்டடம் கொரோனா கேர் சென்டராக மாற்றப்படுகிறது. இங்கு ஒரே இடத்தில் 800 படுக்கைகள் தயாராகி வருகின்றன. இதனுடன் அத்தியாவசிய மருந்து, ஆக்ஸிஜன் சிலிண்டர், உணவு வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.

  சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘லேசான, அறிகுறியில்லாத நோயாளிகளை கொரோனா கேர் சென்டரில் அனுமதிக்க உள்ளோம். ஒரே இடத்தில் பலரை அனுமதித்தால் கவனிப்பது எளிது. இதற்காக எல்காட் கட்டடத்தில் பிரமாண்ட சென்டர் அமைக்கப்படும். தேவைப்பட்டால் கல்லுாரி கட்டடங்களும் பயன்படுத்தப்படும்’ என்றார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  three × 2 =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,107FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »