Home சற்றுமுன் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் எதற்கெல்லாம் தடை?

ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் எதற்கெல்லாம் தடை?

tenkasi in lockdown
tenkasi in lockdown

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில், சில்லறை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மிகப்பெரிய வணிக வளாகங்கள், பெரிய கடைகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதிக்கலாம். அதே வேளையில், பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு சில முக்கியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வர இ-பதிவு அவசியம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆட்டோக்களில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது உள்ளிட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version