ஏப்ரல் 20, 2021, 9:21 காலை செவ்வாய்க்கிழமை
More

  தந்தைக்கு சப்போர்ட்.. 3 வயது மகளைக் கொன்ற தாய்!

  loose - 1

  கணவருடன் தொலைக்காட்சி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் 3 வயது குழந்தைக்கு பெற்ற தாய் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  26 வயதான பெண் சுதா, மல்லத்தஹள்ளி பகுதியைச் சேர்ந்த இவர் டைல்ஸ் கடை ஒன்றில் அலுவலக பணியாளராக வேலை செய்து வருகிறார்.

  இந்நிலையில், இவரது கணவர் ஈரண்ணாவும் தினக்கூலியாக வேலை செய்து வரும் நிலையில், இவர்களுக்கு 3 வயதாகும் வினுதா என்ற மகள் உள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் சுதாவின் கணவர் ஈரண்ணா மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்துள்ளார்.

  அப்போது, மகள் வினுதா தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்ததை கவனிக்காமல் ரிமோட்டை எடுத்து அவர் வேறு சேனலை மாற்றி செய்திச் சேனனில் வைத்துள்ளார்.

  இந்நிலையில், அவரது மனைவி எப்போதும் செய்திச் சேனல் மட்டும் தானா என்று கோபம் அடைந்துள்ளார். மேலும், ஆத்திரம் அடைந்த மனைவி தனது கணவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். போக போக செய்தி சேனல்களை மட்டுமே பார்க்க வேண்டும் என்றால் இனி வீட்டுக்கே வரவேண்டாம் என தெரிவித்திருக்கிறார்.

  இதனால், மன வேதனை அடைந்த குழந்தை தனது தந்தைக்கு ஆதரவாக “அப்பாவே டிவி பார்க்கட்டும், அம்மாவிற்கு பைத்தியம் பிடித்து விட்டது” என கூறியதால் ஆத்திரம் அடைந்த சுதா அந்த பிஞ்சுக் குழந்தையை கொலை செய்திருக்கிறார்.

  பிறகு, எதுவும் தெரியாதது போல ஜனபாரதி காவல்நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் கொடுத்திருக்கிறார்.

  அப்போது அவர், மல்லத்தஹள்ளி அருகே உள்ள ஒரு கடையில் சாட் உணவுகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது தனது மகள் தொலைந்து விட்டதாக அவர் புகார் கொடுத்துள்ளார்.

  இந்நிலையில், பெங்களூருவின் நகர்பவி பகுதியில், கட்டுமானப்பணி நிறைவடையாத பில்டிங் ஒன்றில் இந்த துயர சம்பவம் நடைபெற்ற நிலையில், அடுத்த நாள் காலையில் அந்த வழியாக சென்ற ஒருவர் குழந்தையின் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

  இதை தொடர்ந்து, குழந்தையின் உடலை கைப்பற்றி குழந்தையின் பெற்றோரை விசாரித்த போது, தான் தான் மகளை கொடூரமாக கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,115FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »