Home அடடே... அப்படியா? கொரோனா பரவலை கட்டுப்படுத்த… கரூர் போலீசார் மேற்கொண்ட உத்தி..!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த… கரூர் போலீசார் மேற்கொண்ட உத்தி..!

karur traffic police3

கரூர்: கொரோனா பரவலை கட்டுப்படுத்த கரூர் நகர போக்குவரத்து காவல்துறை நூதன வியூக யுக்தி – முதலில் தனியார் ஹோட்டல், ஜவுளி, நகைக்கடை உள்ளிட்ட கடை உரிமையாளர்களிடம் ஊழியர்களுக்கும், கடையின் வாடிக்கையாளர்களுக்கும் கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கருத்தரங்கம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஷஷாங் சாய் உத்தரவு படி கரூர் நகர போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் லாட்ஜ், உணவகம், லாரி ஆபீஸ், ஜவுளிக்கடை, நகைக்கடை பலசரக்கு கடை மற்றும் சிறு வணிகர் சங்கத் தலைவர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

கரூரில் உள்ள அழகம்மை மஹால் என்கின்ற தனியார் கூட்ட அரங்கில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷஷாங் சாய் உத்தரவின் படி கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டும், கொரோனா வைரஸ் தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. ’

இக்கூட்டத்தில் வணிக வளாகம், தனியார் லாட்ஜ், தனியார் உணவகம், ஜவுளிக்கடை, நகைக்கடை என்று பல்வித தொழில் வளாகங்களை சார்ந்தவர்கள் மற்றும் லாரி கூட்டமைப்பினை சார்ந்தவர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர். கரூர் வர்த்தக சங்க தலைவர் ராஜு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

மேலும், இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்து, முகக்கவசம் அணிந்து, அடிக்கடி கிருமிநாசினி மூலம் தங்கள் கைகளைக் சுத்தம் செய்து பணி புரிய வேண்டும்., மேலும் இதனை தொடர்ந்து அனைத்து வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிந்து கடைக்குள் வர வேண்டுமென்றும், கிருமி நாசினி மூலம் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது கைகளை சுத்தம் செய்து கொள்வதோடு, அவர்களிடையே சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டு கொரோனா தொற்று ஏற்படாமல், நாம் தொழில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கரூர் நகர போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மேலும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து வணிகத் தலைவர்களும் கட்டாயம் அரசு வழிகாட்டுதலை கடைபிடிப்போம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கரூர் நகரத்திற்குட்பட்ட, போக்குவரத்து காவலர்கள் மற்றும் சுமார் 100 க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version