இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து விரும்பினால் அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம் என சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவின் தலையங்கத்தில், “முஸ்லிம்கள் இந்த நாட்டில் இருந்து ஏதாவது விரும்பினார்கள் என்றால் முதலில் அவர்கள் இந்தியாவை தாய் நாடாக மதிக்க வேண்டும். வந்தே மாதரம் என முழங்க வேண்டும். அவர்களுடைய மதத்தை இறுக்கமாகப் பற்றிக் கொண்டே இந்தியாவில் சலுகைகளை எதிர்பார்க்கக் கூடாது. அப்படி ஏதவது அவர்கள் சிறப்பு அந்தஸ்து விரும்பினால், அவர்கள் பாகிஸ்தான் செல்லலாம்…” என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அக்பருத்தீன் ஓவைஸி இரு தினங்களுக்கு முன்னர், “மகாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு வேண்டும்; முஸ்லிம்கள் நிறைய பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாகவே அவர்களுக்காக நான் பேசுகிறேன்” என கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சாம்னாவில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகளின் தாக்குதலால் எத்தனை இந்துக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதை அவரால் மறுக்க முடியுமா. ஓவைஸியின் பேச்சு, வெறுப்புப் பிரச்சாரமாகக் கருதப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.
சிறப்பு அந்தஸ்து விரும்பினால் இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் செல்லலாம்: சிவசேனா
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari