
தமிழ்ப் புத்தாண்டு
(பிலவ ஆண்டு) ராசிபலன்கள்
சூரிய பகவான் வரும் 14.04.2021 நள்ளிரவு 02.24.22க்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். அது முதல் புது வருடம் பிறக்கிறது. 14.04.2022 காலை 08.32.57 முதல் சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும்.
இந்த பிலவ ஆண்டில், வரும் ஓர் ஆண்டுக்குமான ராசி பலன்கள் இங்கே தரப் பட்டுள்ளன.
பிலவ வருட வெண்பா:
பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடை மிகுராசர்
சலமிகுதி துன்பந் தரும் நலமில்லை
நாலுகால் சீவனெல்லாம் நாசமாம் வேளாண்மை
பாலுமின்றி செய்புவனம் பாழ்
பலன்: பிலவ ஆண்டில் மழையின் அளவு மிகக் குறைவு, கெடுதல் அதிகம், அரசர்களால் துன்பம் நேரிடும், நன்மை என்பதே இவ்வுலகில் விளையாது. கால்நடைகள் நாசமாகும் வேளாண்மைத் தொழிலும் நடக்காது. பால்வளம் குறையும்.
குறிப்பு: சமீபத்தில் கும்பத்தில் பெயர்ச்சியான குரு பகவானின் சஞ்சாரங்கள் மற்றும் சனி பகவான் சஞ்சாரங்கள், வருட கடைசியில் ராகு-கேது பெயர்ச்சி மற்ற கிரஹங்களின் மாதாந்தர சஞ்சாரங்கள் இவற்றைக் கணக்கில் கொண்டு, மூன்று பிரிவுகளாகக் கொண்டு பலன்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.
சித்திரை முதல் ஆடி வரை, ஆவணி முதல் கார்த்திகை வரை, மார்கழி முதல் பங்குனி வரை எனப் பிரித்தும், பங்குனி ஆரம்பத்தில் ராகு-கேது மேஷம் துலாத்திற்கும், பங்குனி கடைசியில் குருபகவான் மீனத்துக்கும் மாறுவதையும் கருத்தில் கொண்டும் பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
வருட வெண்பாவில் கூறப்பட்டிருக்கும் பலன் சுமார் என்று சொல்லப் பட்டாலும் கிரஹ நிலைகள் நன்மை தருவதாக இருப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை!
புத்தாண்டு பலன்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர்,
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email ID : [email protected]
மிதுனம் : (மிருகசீரிடம் 3,4 பாதங்கள், திருவாதிரை 4பாதங்கள், புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய) :
சித்திரை முதல் ஆடி வரையில்: உங்கள் ராசிநாதன் புதன் 10ல் பலமாய் தன் நக்ஷத்திரகாலில் வருடம் தொடங்கும் போது. மேலும் 9ல் குரு அதிசாரம், சூரியன் லாபத்தில் என்ற நிலையில் வருட ஆரம்பம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும் எந்த வழியிலாவது பணம் வந்து சேரும். குரு 9ம் இடம் சஞ்சாரம் ஜீவன வழியில் பாதிப்பு இல்லை. தேவைகள் பூர்த்தியாகும். அதே நேரம் சிக்கணம் தேவை, அனாவசிய செலவுகளும் வரும் ஆடம்பர செலவுகளும் உண்டாகும். இருந்தாலும் கவனமாக இவற்றை தவிர்க்க இயலும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் வந்து கொண்டே இருக்கும். நெருங்கிய சொந்தங்களின் திருமணம், சுப நிகழ்ச்சிகள் மூலம் இன்னும் நெருக்கம் உண்டாகும் பெயர் புகழ் அதிகரிக்கும். மேலும் சிலருக்கு புதுவீடுவாங்கும் யோகம் புதிய வாகனங்கள் கிடைத்தல், கடன்தொல்லை முற்றிலுமாக நீங்குதல், புதிய கடன் வாங்கும் அவசியம் இல்லாமல் போகுதல் மன நிம்மதி கூடுதல் என்று நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும், பெற்றோர்களால் அல்லது சகோதர வகையில் இருந்துவந்த பிணக்குகள் தீரும். சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் சமாளித்து குடும்பம் நிம்மதியாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை , குடும்பத்தில் திருமண முயற்சிகள் கைகூடுதல், புதிய வரவுகளால் சந்தோஷம், குழந்தை பாக்கியம் உண்டாதல் என்று மிக நன்றாகவே இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கடன் எதிரி தொல்லை இருக்காது. உத்தியோகத்திலும், சொந்த தொழிலும் மிக நல்ல முன்னேற்றம் காணும்.
ஆவணி முதல் கார்த்திகை வரையில்: உத்தியோகம் பொறுத்தவரை 14.11.21 வரையில் கொஞ்சம் பொறுமை வேண்டும். வேலை பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணப்புழக்கம் குறைவாகவும் தேவைகள் சிரமத்திலும் பூர்த்தியாகும். சொந்த தொழில் செய்வோரும் கொஞ்சம் நிதானம் கணக்குவழக்குகளை சரியாக வைத்திருத்தல் புதிய திட்டங்கள், தொழில் விஸ்தரிப்பு என்பது தை பிறந்தபின் வைத்து கொள்வதும். புதிய உத்தியோகம் முயற்சிப்பவர்கள் வெளிநாடு வேலை இவை தை பிறந்து எளிதில் கிடைக்கும். வீன் விவாதங்களை தவிர்ப்பது. அக்கம்பக்கத்தாரோடு, உடன் வேலை செய்வோரோடு, வேலைக்காரர்களோடு என்று யாரிடமும் வீண் விவாதம் வேண்டாம். மேலும் உடல் ஆரோக்கியத்தில் முக்கியமாக பெற்றோர்கள் வாழ்க்கை துணைவர் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பொதுவாக பெரிய பிரச்சனைகள் இருக்காது கொஞ்சம் தாமதம் ஆகும் நிதானம் முன் யோசனை இவை இருந்தால் போதும்.
மார்கழி முதல் பங்குனி வரையில்: 14.11.21 முதல் மீண்டும் உற்சாகம். 11ல் வரும் ராகு, 10ல் குரு, பின் சூரியன், புதன், செவ்வாய் சஞ்சாரங்கள் என்று அனைத்தும் அளப்பறிய நன்மைகளை செய்கிறபடியால் பொருளாதாரம் ஏற்றம் காணும். புதிய சொந்த தொழில் முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் விரும்பிய பதவி, வேலை பளு குறைதல், கோரிக்கைகள் நிறைவேறுதல், நல்ல பெயர் உண்டாகுதல், தொழிலில் நல்ல முன்னேற்றம் நாள் பட்ட சரக்கு விற்றல், கூட்டாளிகளுடன் ஒற்றுமை. குடும்பத்தில் மகிழ்ச்சி கூடுதல் தடைபட்ட திருமண நிகழ்வுகள் நடைபெறுதல், புத்திரபாக்கியம் இப்படி எல்லாம் மிக நன்றாக இருக்கும். வியாதிகள் தனியும், விவசாயம் போன்றவை ஏற்றம் காணும். கடன்கள் தீரும் எதிரி தொல்லைகள் இருக்காது. மேலும் குரு பார்வையும், சனியின் பார்வையும் நல்லபலனை தரும். 6ல் இருக்கும் கேது வருட கடைசியில் 5ல் வந்து சில வியாதிகளை அல்லது பிள்ளைகளால் கஷ்டம் இவற்றை தந்தாலும் மற்ற கிரஹங்களின் சஞ்சார நிலை இவற்றை குறைத்து நன்மை தருகிறது. பொதுவில் மிக மகிழ்ச்சியான வருடம். சேமிப்பை அதிகரித்து கொள்ளுங்கள்.
ப்ரார்த்தனைகள் : அனந்தபத்மநாபன், அரங்கன் போன்ற பாம்பு படுக்கையில் இருக்கும் பெருமாளையும், சயன கோலத்தில் இருக்கும் பெருமாளை வழிபடுவது விளக்கேற்றுவது முடிந்தால் விஷ்ணுசகஸ்ரநாமம் சொல்வது நன்மை தரும். முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள்.