Home சற்றுமுன் கோவில்களில் போஸ்டர் ஒட்டினால் தான் இயேசுவுக்கு காப்பாற்ற சக்தி கிடைக்கும் போல!

கோவில்களில் போஸ்டர் ஒட்டினால் தான் இயேசுவுக்கு காப்பாற்ற சக்தி கிடைக்கும் போல!

தமிழக கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து நீக்க தொடங்கப்பட்ட போராட்டமும் பிரச்சாரமும் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் “இயேசுவே தமிழகத்தை ஆசீர்வதியும்” என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டது‌ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ்-திமுக ஆட்சிக் காலத்தில் குறிப்பாக சுனாமிக்குப் பின்னர் கடலோர மாவட்டங்களும், சிறிது சிறிதாக உட்பகுதி மாவட்டங்களும் மிஷனரிகளின் பிடியின் கீழ் வந்தது அனைவரும் அறிந்த ரகசியம். அப்போதிருந்து தமிழகத்தில் மிஷனரிகளின் ஆட்டம் அதிகரித்து தான் காணப்படுகிறது.

வேண்டுமென்றே கோவிலுக்கு முன் பிட் நோட்டீஸ் வழங்கி “இயேசு ஒருவரே கடவுள்” என்று மதப் பிரச்சாரம் செய்வது, கோவில்களுக்கு அருகே உள்ள தீர்த்தங்களில் ஞானஸ்நானம் செய்து மதம் மாற்றுவது, கோவில் கல்வெட்டுகளில் மத மாற்ற பிரச்சார நோட்டீஸ் ஒட்டுவது என்று இந்துக்களை சீண்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.

ஆண்டுக்கு ₹2000 கோடி என்ற அளவில் தமிழகத்தில் உள்ள NGOக்கள் மட்டுமே‌ வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை மிஷனரி அமைப்புக்கள் அல்லது சமூக சேவை என்ற‌பெயரில் அவற்றுக்கு உதவும் மறைமுக மிஷனரி அமைப்புகளாக உள்ளன.

கோவில் அடிமை நிறுத்து பிரச்சாரத்தில் ஏற்கனவே கிரிப்டோ கிறிஸ்டியன் எனப்படுபவர்கள் “கோவில்கள் தமிழருக்கு சொந்தம்” என்ற கருத்தைப் பரப்பி வரும் நிலையில் “இயேசுவே தமிழகத்தை ஆசீர்வதியும்” என்ற போஸ்டர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தென்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்களிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது இந்துக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது இந்து மக்கள் கட்சியின் கவனத்துக்கு சென்ற நிலையில் “கோயில் சுவற்றில் மற்றும் அருகில் ஒட்டியுள்ள மத சார்புடைய சுவரொட்டிகள் அகற்றப்படவில்லை எனில், இந்து மக்கள் கட்சி சார்பாக அனைத்து மத தலங்களில் சுவர்களிலும் தாய் மதம் திரும்பு சகோதரா உன் மனம் மாற்றத்தை விரும்பும் ஈஸ்வரன் என்று பதிலுக்கு ஒட்டப்படும்.” என்று அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்து விடும் என்ற தைரியத்திலும் மிதப்பிலும் மிஷனரி அமைப்புகள் மீண்டும் தங்கள் கொட்டத்தை ஆரம்பித்து விட்டனவோ என்ற அச்சத்தையும் இந்த போஸ்டர்கள் ஏற்படுத்தி உள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version