Home சற்றுமுன் எச்சரிக்கை: வாட்ஸ் அப்பை இழக்க நேரிடலாம்..!

எச்சரிக்கை: வாட்ஸ் அப்பை இழக்க நேரிடலாம்..!

whatsapp
whatsapp

தகவல் பரிமாற்றத்திற்கு கோடிக்கணக்கானவர்களின் ஏகோபித்த தேர்வாக வாட்ஸ் அப் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த புதிய வசதிகளையும், சலுகைகளையும் வழங்கி வாடிக்கையாளர்களை தக்கவைத்து வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம்.

தற்போது வாட்ஸ்அப்பில் ஒரு புதிய பாதுகாப்பு குறைபாட்டை பயனர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி பயனர்களின் அனுமதி இல்லாமலேயே அவர்கள் அறியாமலேயே வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை விட்டு நீக்க முடியும்.

வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை விட்டு நீக்குவதன் மூலம், ஒரு அட்டாக்கரால் தனிப்பட்ட டேட்டாக்களை கவர்ந்துவிட முடியாது எனவும், ஆனால் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை நீங்கள் நிரந்தரமாக இழக்க நேரிடலாம் எனவும் அதனால் புதிய அக்கவுண்ட்டைத் திறக்க வேண்டியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த ஆய்வு முடிவுகள் அறிக்கையின் படி, ஒரு வாட்ஸ்அப் பயனர் பல முறை தவறான two-factor-authentication குறியீடுகளை பதிவிடுவதால் மிகவும் எளிதாக லாக் அவுட் ஆவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தவறான குறியீடுகளால் வாட்ஸ்அப் அக்கவுண்ட் தானாகவே 12 மணி நேரம் லாக் ஆகிவிடும். இப்படி எதிர்பாராத ஆகும் பட்சத்தில் செய்கிறது.

ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டியது 2FA குறியீட்டைக் கேட்பதற்கு முன்பு எஸ்எம்எஸ் மூலம் ஓடிபி பதிவிட வேண்டி வரும் அதன் பிறகுதான் இந்த ஹேக்கிங் நிகழ்த்த முடியும் அதனால் ஸ்மார்ட்போனில் இருந்து OTP ஐ பெற வேண்டி வரும்.

இதனை செய்பவர்கள் நம்முடைய மொபைலை உபயோகிக்கிப்பவராகவே இருக்க வேண்டும். மற்றவர்கள் செய்யும் வாய்ப்புக்கள் குறைவு தான் என்றாலும் அக்கவுண்ட்டை டெலிட் செய்வதால் எந்த லாபமும் அடைந்துவிட முடியாது என்பது ஆறுதலான விஷயம். இருப்பினும் பயனர்கள் கவனமாக இருக்க வாட்ஸ் அப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version