May 12, 2021, 4:56 am Wednesday
More

  ஶ்ரீராமப்ராத: ஸ்மரணம் ஶ்ரீராமபஞ்சகம்: தமிழ் அர்த்தத்துடன்..!

  ramar
  ramar

  ஶ்ரீராமப்ராத:ஸ்மரணம் ஶ்ரீராமபஞ்சகம்

  ப்ராத: ஸ்மராமி ரகு⁴நாத²முகா²ரவிந்த³ம்
  மந்த³ஸ்மிதம் மது⁴ரபா⁴ஷி விஶாலபா⁴லம் ।
  கர்ணாவலம்பி³சல குண்ட³லஶோபி⁴கண்ட³ம்
  கர்ணாந்ததீ³ர்க⁴நயநம் நயநாபி⁴ராமம் ॥ 1॥

  ஸ்ரீராமனின் தாமரை போன்ற முகத்தையும் அழகிய புன்சிரிப்பும் இனிய பேச்சையும் பிரகாசிக்கும் நெற்றியையும் கன்னத்தையும் காதில் அணிந்த குண்டலங்களை யும் காது வரையில் நீண்ட அழகிய கண்களையும் விடியற்காலையில் தியானம் செய்கிறேன்.

  ப்ராதர்ப⁴ஜாமி ரகு⁴நாத²கராரவிந்த³ம்
  ரக்ஷோக³ணாய ப⁴யத³ம் வரத³ம் நிஜேப்⁴ய: ।
  யத்³ராஜஸம்ஸதி³ விப⁴ஜ்ய மஹேஶசாபம்
  ஸீதாகரக்³ரஹணமங்க³ளமாப ஸத்³ய: ॥ 2॥

  ரகு வம்சநாதனாகிய ஸ்ரீராமரின் தாமரை போன்ற கைகளை விடியற்காலையில் பூஜிக்கிறேன். அந்தக் கைகள் பல அரக்கர் கூட்டங்களுக்குப் பயத்தை உண்டாக்குகின்றன. அதே கைகள் பக்தர்களுக்கு அவர்கள் விரும்பும் வரத்தையும் அளிக்கின்றன. அந்தக் கைகளால் ஸ்ரீராமர் பரமேசுவானின் வில்லை வளைத்து உடைத்தார். உடனே சீதையைக் கைப்பிடித்து திருமணம் செய்துகொண்டார்.

  ப்ராதர்நமாமி ரகு⁴நாத²பதா³ரவிந்த³ம்
  வஜ்ராங்குஶாதி³ஶுப⁴ரேகி² ஸுகா²வஹம் மே ।
  யோகீ³ந்த்³ரமாநஸமது⁴வ்ரதஸேவ்யமாநம்
  ஶாபாபஹம் ஸபதி³ கௌ³தமத⁴ர்மபத்ந்யா: ॥ 3॥

  ஸ்ரீராமரின் தாமரை போன்ற திருவடிகளுக்கு விடியற்காலையில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன். பத்ம ரேகை, அங்குசம் ஆகிய மங்களகரமான அடையாளங்கள் பொருந்தியிருக்கும் அந்தப் பாதங்கள் எனக்கு நன்மையையும் சுகத்தையும் அளிக்கட்டும். வண்டுகள் மலர்களைச் சென்றடைவதுபோல், அந்தப் பாதங்களைத்தான் யோகிகள் மனதினால் தியானம் செய்து சென்றடைகிறார்கள். அதே பாதங்கள்தான் கௌதம மகரிஷியின் தர்மபத்தினியான அகல்யையைச் சாபத்திலிருந்து விடுவித்தன.

  ப்ராதர்வதா³மி வசஸா ரகு⁴நாத² நாம
  வாக்³தோ³ஷஹாரி ஸகலம் ஶமலம் நிஹந்தி ।
  யத்பார்வதீ ஸ்வபதிநா ஸஹ போ⁴க்துகாமா
  ப்ரீத்யா ஸஹஸ்ரஹரிநாமஸமம் ஜஜாப ॥ 4॥

  வாக்கு தோஷங்களையெல்லாம் அகற்றுவதும், பாவங்களைப் போக்குவதும் ஆகிய திவ்ய ராம நாமத்தை விடியற்காலையில் உரக்க உச்சரித்து ஜபம் செய்கிறேன். விஷ்ணு சகஸ்ர நாமத்திற்குச் சமமான இந்த ராம நாமத்தைத்தான் பார்வதி ஆர்வத்துடன் தனது பதியான சிவபெருமானுடன் ஜபம் செய்தாள்.

  ப்ராத: ஶ்ரயே ஶ்ருதிநுதாம் ரகு⁴நாத²மூர்திம்
  நீலாம்பு³ஜோத்பலஸிதேதரரத்நநீலாம் ।
  ஆமுக்தமௌக்திகவிஶேஷவிபூ⁴ஷணாட்⁴யாம்
  த்⁴யேயாம் ஸமஸ்தமுநிபி⁴ர்ஜநமுக்திஹேதும் ॥ 5॥

  யோகிகள் நாடுவதும், தனது முக்கிய சேவகர்களால் வணங்கப்படுவதும், சுருதியில் புகழப்படுவதும், அழகிய ரத்தினங்கள் இழைக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப் பெற்றதும், மேகம் போன்று நீல நிறமானதும், நீல தாமரை போலிருப்பதும், நீல மணிகள் போன்றதுமாகிய ஸ்ரீராமரின் திருவருவத்தை விடியற்காலையில் தியானம் செய்கிறேன்.

  ய: ஶ்லோகபஞ்சகமித³ம் ப்ரயத: படே²த்³தி⁴
  நித்யம் ப்ரபா⁴தஸமயே புருஷ: ப்ரபு³த்³த:⁴ ।
  ஶ்ரீராமகிங்கரஜநேஷு ஸ ஏவ முக்²யோ
  பூ⁴த்வா ப்ரயாதி ஹரிலோகமநந்யலப்⁴யம் ॥

  இந்த ஐந்து சுலோகங்களையும் தினமும் தவறாமல் விடியற்காலையில் எழுந்தவுடன் எவனொருவன் ஜபம் செய்கிறானோ, அவன் ஸ்ரீராம பக்தர்களில் முதல்வனாகக் கருதப்படுவது மட்டுமின்றி, மற்றவர்கள் அடைய முடியாத உயர்ந்த (வைகுண்ட) லோகத்தையும் அடைவான்.

  ॥ இதி ஶ்ரீராமகர்ணாம்ருʼதாந்தர்க³தம் ஶ்ரீராமப்ராத:ஸ்மரணம் ॥

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,241FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,183FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »