Home சற்றுமுன் அறிந்து கொள்ளுங்கள்.. உங்கள் பெயரில் வேறு சிம்கார்டு உள்ளதா?

அறிந்து கொள்ளுங்கள்.. உங்கள் பெயரில் வேறு சிம்கார்டு உள்ளதா?

cell phone
cell phone

உங்கள் பெயரின் கீழ் எத்தனை மொபைல் நம்பர் பயன்பாட்டில் உள்ளது என்பதை கண்டுபிடிக்க, DoT ஒரு போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது.

தங்கள் பெயரின் கீழ் எத்தனை மொபைல் எண்கள் வாங்கப்பட்டுள்ளது? அதாவது தங்கள் பெயரின் கீழ் யாரவது சிம் கார்டு வாங்கி உள்ளார்களா? என்பதை தற்போது தொலைதொடர்புத் திணைக்களம் (Department of Telecommunications – DoT) அறிமுகப்படுத்தி உள்ள போர்ட்டல் மூலமாக தெரிந்து கொள்ளலாம். வழியாக பயனர்கள் கண்டுபிடிக்க முடியும்.

ஆம், அந்த போர்ட்டலின் முகவரி – tafcop.dgtelecom.gov.in ஆகும். இந்த போர்ட்டலின் முக்கிய பயன்பாடு என்னவென்றால், ஒருவர் தங்களுக்கு தெரியாமல் தங்களின் பெயரில் யாராவது பயனர்கள் மொபைல் எண்(சிம் கார்ட்) வாங்கி, பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டுபிடிக்க உதவும்.

ஒருவரின் விவரங்களை அங்கீகாரமற்ற முறையில் பயன்படுத்தி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்த பிறகு தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, மோசடி செய்பவர்கள் தங்களின் பெயரில் சிம் கார்டை வாங்குவது இல்லை. மாறாக வேறு ஒருவரின் பெயரின் கீழ் சிம் கார்டை வாங்கி அதை சட்டவிரோத நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவார்கள். ஆனால் இதனால் பாதிக்கப்படுவது ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் தான். இதை தடுப்பதர்க்கு இந்த போர்டல் மிகவும் உதவியுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதை பற்றி பேசிய ஆந்திர பிரதேச, DoT-இன் துணை இயக்குநர் ஜெனரல் A.ராபர்ட் ரவி, “மக்கள் தங்கள் பெயரில் வழங்கப்படும் மொபைல் இணைப்புகளை அடையாளம் காண இந்த தளம் உதவும். அப்படி, ஒருவர் தங்கள் பெயரின் கீழ், தங்களால் பயன்படுத்தப்படாத மொபைல் எண்ணை இருப்பதை கண்டிறிந்தால் அதை உடனடியாக தடுக்குமாறு கோரலாம்.

ஒரு தனி நபர் தங்களின் பெயரில், ஒன்பது மொபைல் இணைப்புகளை பெற்று கொள்ளலாம். ஆனால் சில பயனர்களின் பெயரில் ஒன்பதுக்கும் மேற்பட்ட இணைப்புகள் செயல்பாட்டில் உள்ளதால், அவைகளை அடையாளம் கண்டு, நீக்குவதே இந்த போர்டலின் மிகப்பெரிய நோக்கமாகும்.

மேலும், ஒருவர் தங்களின் ஆக்டிவ் நம்பர் மற்றும் அதற்கு கிடைக்கும் OTP ஐப் பயன்படுத்தி இந்த போர்ட்டலை பயன்படுத்தலாம் என ET டெலிகாம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், ஒருவரின் பெயரின் கீழ் இயங்கும் மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கையை, Department of Telecommunications – DoT ஒரு எஸ்எம்எஸ் மூலம் உங்களை அலெர்ட் செய்யும். பின்னர், இதை குறித்து புகார் கொடுத்தால், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் குறிப்பிட்ட எண்களைத் செயலிழக்கச் செய்வார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version