― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்யாராலும் எண்ணிப் பார்க்க முடியாத ஆறுகள்! நதியின் விதியைப் பாருங்கள்!

யாராலும் எண்ணிப் பார்க்க முடியாத ஆறுகள்! நதியின் விதியைப் பாருங்கள்!

- Advertisement -
tamirabharani

தமிழக நதிகள்:

படித்தால் மலைத்து மட்டுமல்ல வயிறெரிந்தும். போவீர்கள்…!

ஆனாலும் திருடும் கட்சிகளுக்குத்தான் வாக்களித்து மேலும் திருட வழிவகுப்பீர்கள்!

  1. கடலூர் மாவட்டம்
    a)தென்பெண்ணை,
    b)கெடிலம்,
    c)வராகநதி,
    d)மலட்டாறு,
    e)பரவனாறு,
    f)வெள்ளாறு,
    g)கோமுகி ஆறு,
    h)மணிமுக்தாறு,
    i)ஓங்கூர்
  2. விழுப்புரம் மாவட்டம்
    a)கோமுகி ஆறு,
    b)மலட்டாறு,
    c)மணிமுத்தாறு
  3. காஞ்சிபுரம் மாவட்டம்
    a)அடையாறு,
    b)செய்யாறு,
    c)பாலாறு,
    d)வராகநதி,
    e)தென்பெண்ணை,
    f)பரவனாறு
  4. திருவண்ணாமலை மாவட்டம்
    a)தென்பெண்ணை,
    b)செய்யாறு,
    c)வராகநதி,
    e)வெள்ளாறு
  5. திருவள்ளூர் மாவட்டம்
    a)கூவம்,
    b)கொசஸ்தலையாறு,
    c)ஆரணியாறு,
    d)பாலாறு
  6. கரூர் மாவட்டம்
    a)அமராவதி,
    b)பொன்னை
  7. திருச்சி மாவட்டம்
    a)காவிரி,
    b)கொள்ளிடம்,
    c)பொன்னை,
    d)பாம்பாறு
  8. பெரம்பலூர் மாவட்டம்
    a)கொள்ளிடம்
  9. தஞ்சாவூர் மாவட்டம்
    a)காவிரி,
    b)வெட்டாறு,
    c)வெண்ணாறு,
    d)கொள்ளிடம்,
    e)அக்கினி ஆறு
  10. சிவகங்கை மாவட்டம்
    a)வைகையாறு,
    b)பாம்பாறு,
    c)குண்டாறு,
    d)கிருதமல் ஆறு,
  11. திருவாரூர் மாவட்டம்
    a)காவிரி,
    b)வெண்ணாறு,
    c)பாமணியாறு,
    d)குடமுருட்டி
  12. நாகப்பட்டினம் மாவட்டம்
    a)காவிரி,
    b)வெண்ணாறு
  13. தூத்துக்குடி மாவட்டம்
    a)ஜம்பு நதி,
    b)மணிமுத்தாறு,
    c)தாமிரபரணி,
    d)குண்டாறு,
    e)கிருதமல் ஆறு,
    d)கல்லாறு,
    e)கோராம்பள்ளம் ஆறு
  14. தேனி மாவட்டம்
    a)வைகையாறு,
    b)சுருளியாறு,
    c)தேனி ஆறு,
    d)வரட்டாறு,
    e)வைரவனாறு
  15. கோயம்புத்தூர் மாவட்டம்
    a)சிறுவாணி,
    b)அமராவதி,
    c)பவானி,
    d)நொய்யலாறு,
    e)பம்பாறு
    f)கெளசிகா நதி
  16. திருநெல்வேலி மாவட்டம்
    a)தாமிரபரணி,
    b)கடனா நதி,
    c) சித்ரா நதி (சிற்றாறு),
    d)இராமநதி,
    e)மணிமுத்தாறு,
    f)பச்சை ஆறு,
    g)கறுப்பா நதி,
    h)குண்டாறு,
    i)நம்பியாறு,
    k)கொடுமுடிஆறு,
    l)அனுமாநதி,
    m)கருமேனியாறு,
    n)கரமணை ஆறு
    (சேர்வலாறு.மணிமுத்தாறு.கடனா ஆறு. பச்சையாறு. சிற்றாறு. பேயனாறு. நாகமலையாறு,காட்டாறு.சோம்பனாறு,கௌதலையாறு.உள்ளாறு.பாம்பனாறு.காரையாறு.நம்பியாறு.கோதையாறு.கோம்பையாறு. குண்டாறு இவை அனைத்தும் தாமிரபரணியின் துணையாறுகள் )
  17. மதுரை மாவட்டம்
    a)பெரியாறு,
    b)வைகையாறு,
    d)குண்டாறு,
    e)கிருதமல் ஆறு,
    f)சுள்ளி ஆறு,
    g)வைரவனாறு,
    h)தேனியாறு,
    i)வாட்டாறு,
    j)நாகலாறு,
    k)வராகநதி,
    l)மஞ்சள் ஆறு,
    m)மருதாநதி,
    n)சிறுமலையாறு,
    o)சுத்தி ஆறு,
    p)உப்பு ஆறு
  18. திண்டுக்கல் மாவட்டம்
    a)பரப்பலாறு,
    b)வரதம்மா நதி,
    c)மருதா நதி,
    d)சண்முகாநதி, e)நங்கட்சியாறு,
    f)குடகனாறு,
    g)குதிரையாறு,
    h)பாலாறு,
    i)புராந்தளையாறு,
    j)பொன்னை,
    k)பாம்பாறு,
    l)மஞ்சள் ஆறு
  19. கன்னியாகுமரி மாவட்டம்
    a)கோதையாறு,
    b)பறளியாறு,
    c)பழையாறு,
    d)நெய்யாறு,
    e)வள்ளியாறு
  20. இராமநாதபுரம் மாவட்டம்
    a)குண்டாறு,
    c)கிருதமல் ஆறு,
    d)வைகை,
    e)பாம்பாறு, f)கோட்டகரையாறு,
    g)உத்திரகோசம் மங்கை ஆறு
  21. தருமபுரி மாவட்டம்
    a)காவிரி,
    b)தொப்பையாறு,
    c)தென்பெண்ணை
  22. சேலம் மாவட்டம்
    a)காவிரி,
    b)வசிட்டாநதி,
    c)வெள்ளாறு
  23. விருதுநகர் மாவட்டம்
    a)கௌசிகாறு,
    b)வைப்பாறு,
    c)குண்டாறு,
    d)அர்ஜுனா நதி,
    e)கிருதமல் ஆறு
  24. நாமக்கல் மாவட்டம்
    a)காவிரி,
    b)உப்பாறு,
    c)நொய்யலாறு
  25. ஈரோடு மாவட்டம்
    a)காவிரி,
    b)பவானி,
    c)உப்பாறு
  26. திருப்பூர் மாவட்டம்
    a)நொய்யலாறு,
    b)அமராவதி,
    c)குதிரையாறு
  27. புதுக்கோட்டை மாவட்டம்
    a)அக்கினி ஆறு,
    b)அம்பூலி ஆறு,
    c)தெற்கு வெள்ளாறு,
    d)பம்பாறு,
    e)கோட்டகரையாறு
  28. இப்படி நதிகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கின்றது.
    தமிழ்நாட்டு நதிகளில் உள்ள நீர்த் தேக்கங்கள் / அணைகள்:
    நீர்த் தேக்கத்தின் பெயர்

வராக நதி படுகை

  1. வீடூர்
    பெண்ணையாறு படுகை
  2. கிருஷ்ணகிரி
  3. சாத்தனூர்
  4. தும்பஹள்ளி
  5. பாம்பார்
  6. வாணியாறு
    வெள்ளாறு நதிப் படுகை
  7. வெல்லிங்டன்
  8. மணிமுக்தா நதி
  9. கோமுகி நதி
    காவேரி நதிப் படுகை
  10. மேட்டூர்
  11. சின்னாறு
  12. சேகரி குளிஹல்லா
  13. நாகவதி
  14. தொப்பையாறு
  15. பவானி சாகர்
  16. குண்டேரி பள்ளம்
  17. வரட்டுப் பள்ளம்
  18. அமராவதி
  19. பாலாறு, பெருந்தலாறு
  20. வரதமா நதி
  21. உப்பாறு (பெரியாறு மாவட்டம்)
  22. வட்டமலைக் கரை ஓடை
  23. பரப்பலாறு
  24. பொன்னையாறு
  25. உப்பார் (திருச்சி மாவட்டம்)
    வைகை நதிப் படுகை
  26. வைகை
  27. மஞ்சளாறு
  28. மருதா நதி
    வைப்பார் நதிப் படுகை
  29. பிளவுக்கல் (பெரியாறு நீர்த்தேக்கம்)
  30. பிளவுக்கல் (கோவிலாறு நீர்த்தேக்கம்)
  31. வெம்பக்கோட்டை நீர்த்தேக்கம்
  32. குள்ளுர் சந்தை
    தாமிரபரணி நதிப் படுகை
  33. மணிமுத்தாறு
  34. கடனா
  35. ராம நதி
  36. கருப்பா நதி
  37. குண்டாறு
    கோதையாறு நதிப் படுகை
  38. பேச்சிப் பாறை
  39. பெருஞ்சாணி
  40. சித்தாறு – i
  41. சித்தாறு – ii
    மேற்கு நோக்கிப் பாயும் நதிக்களை கிழக்கே திருப்புதல்
    பெரியாறு நதிப் படுகை
  42. பெரியாறு
  43. மேல் நீராறு அணைக்கட்டு
  44. கீழ் நீராறு
    சாலக்குடி நதிப்படுகை
  45. சோலையாறு
  46. பரம்பிக்குளம்
  47. தூனக்கடவு
  48. பெருவாரிப் பள்ளம்
    பாரதப் புழை நதிப் படுகை
  49. ஆழியாறு
  50. திருமூர்த்தி
    இப்படி நீர்த்தேக்கங்களையும் நீண்ட வரிசைப்படுத்தலாம்.
vakai

தமிழக நீர்நிலைகள்
நாட்டின் விடுதலைக்கு முன் அதாவது 1947-ல் அன்றைய சென்னை மாகாணமான இன்றைய தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50,000 நீர் நிலைகள் இருந்தன.

இன்றைக்கு பாதிக்கு குறைவாக 20,000 நீர் நிலைகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

மதுரை, சென்னை மாநகரங்களைச் சுற்றி 500 ஏரிகள் – குளங்கள் காணாமல் போய்விட்டன. பழவேற்காடு ஏரியை ஆந்திர அரசு சிறிது சிறிதாக அபகரித்துக் கொண்டது. வீராண ஏரியும் சரியாகப் பராமரிப்பு இல்லை.

இன்றைக்கு தமிழகத்தில் 18,789 பொதுப்பணித்துறை ஏரிகள், 29,484 கிளை வாய்க்கால்கள், 86 ஆறுகள், 200 அணைகள் என்ற புள்ளிவிபர கணக்கில் தமிழக நீர் நிலைகள் உள்ளன.

நிலத்தடி நீரும் மிகவும் குறைந்துவிட்டது. விவசாய சாகுபடி நிலங்களும் குறைந்துக்கொண்டே வருகின்றன. நீர் நிலைகளில் நீரில்லாமல் நிலத்தடி நீரும் குறைந்துவிட்டதால் 1.10 கோடி ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கெல்லாம் காரணம் என்ன? ரியல் எஸ்டேட் என்று சமூக விரோதிகள் நீர் நிலைகளை கபளிகரம் செய்து தங்களுடைய சொத்துகளைப் போல விற்று கொழுத்துப் போய்விட்டனர்.

Amaravati 1

இருக்கின்ற நீர் நிலைகளை தூர் வாராமல் மதகுகளை சரிவர பழுது பார்க்காமல், நீர் நிலைகளில் கருவேல மரங்கள் வளர்வதை தடுக்காமல் இருந்த நிலையில் நீர் நிலைகளுடைய பயன்பாடு குறைந்துவிட்டது.

மணல் திருடர்கள் ஆறுகளிலும், ஏரிகளிலும் உள்ள மணலை கொள்ளை அடித்ததனால் நீர் வரத்துகளெல்லாம் குறைந்துவிட்டன.

இயற்கையின் அருட்கொடையான அந்த நீர் நிலைகளை நாம் சரிவர பாதுகாக்காமலும் ஆயக்காட்டு நலன்களை புறந்தள்ளியதால் இன்றைக்கு இவ்வாறான கேடுகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.

kaveri

ஜனநாயகம் என்று சொல்லிக் கொண்டு திருட்டுத் தொழிலுக்கும் துணை போகும் ஆட்சியாளர்களால்தான் இந்த மாதிரியான கொடூரங்கள் நடந்து வருகின்றன. மன்னராட்சியில் கூட மக்களுடைய பங்களிப்பில் குளங்களும், நீர் நிலைகளும் வெட்டப்பட்டு மக்களாலேயே பராமரிக்கப்பட்டது.

அது அக்காலம் இன்றைக்கு நாம் ஓட்டுப்போட்டு அனுப்பியவர்கள் இயற்கை வளங்களைச் சுரண்டக் கூடிய கொள்ளைக்காரர்களுக்கு ஆதரவாளர்களாக உள்ளனர். மனிதர்கள் பூமியில் தோன்றலாம். சில காலங்களில் வாழ்ந்து மடியலாம்.

ஆனால் நாகரீகத்தின் தொட்டிலான நதிகள் என்றைக்கும் நிரந்தரமானது. அதை தாயை வணங்குவதைபோல நதிதீரங்களை வணங்கி பாதுகாப்பதுதான் மானிடத்தின் அடிப்படை கடமையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version