சென்னை: விமானப் பயணத்தின் போது மயக்கம் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட பெண் பயணி ஒருவருக்கு முதலுதவி ஏற்பாடு செய்த கனிமொழிக்கு அந்தப் பெண் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார். தி.மு.க. மகளிரணிச் செயலரும் எம்.பி.யுமான கனிமொழி நேற்று கோவை சென்று விட்டு விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது, விமானத்தில் உடன் பயணம் செய்த சக பெண் பயணி ஒருவர் தனக்கு மயக்கமும், மூச்சு திணறலும் ஏற்படுவதாகத் தெரிவித்தார். அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி தைரியமூட்டிய கனிமொழி, விமானம் சென்னை வந்ததும் முதலுதவிக்கு ஏற்பாடு செய்தார். மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதித்தனர். அந்தப் பயணி தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதை அடுத்து அந்தப் பெண்ணை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்த கனிமொழி, தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் செல்போனில் தொடர்பு கொண்டு அவருக்குத் தேவையான சிகிச்சை அளிக்கும்படி கூறினாராம். மேலும் சிகிச்சைக்கான செலவை வழங்குவதாகக் கூறியதையடுத்து அந்தப் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று உடல்நலம் தேறிய அந்தப் பெண், மருத்துவமனையில் இருந்து வந்ததும், கனிமொழியிடம் தன் நன்றியைத் தெரிவித்தார். அந்தப் பெண் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் ‘ஸ்வர்ணம் கவுர்’ என்பதும், அங்கே அவர் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருவதும் தெரியவந்தது. பின்னர் அவர் தில்லி புறப்பட்டுச் சென்றார்.
விமானப் பயணத்தில் மூச்சுத் திணறல் மயக்கம்: உதவிய கனிமொழிக்கு சக பெண் பயணி நன்றி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari