Home அடடே... அப்படியா? தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

stalin

புதிதாக பொறுப்பேற்கவுள்ள தமிழக அமைச்சரவை பட்டியலை வெளியிட்டது ஆளுநர் மாளிகை

தமிழகத்தில் மே 7, வெள்ளிக்கிழமை நாளை புதிய அமைச்சரவை பதவியேற்கிறது. இந்நிலையில், அமைச்சர்கள் இலாக்காக்கள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 133 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது. வெள்ளிக்கிழமை நாளை காலை 9 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக நடைபெறும் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கிறார்.

இந்நிலையில், ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள துறைகளுடனான பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

இதில் முதலமைச்சரான ஸ்டாலினுக்கு பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, காவல், மாவட்ட வருவாய் அலுவலர்கள், சிறப்பு திட்ட செயலாக்கம், மாற்று திறனாளிகள் நலன் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைப் பட்டியல் வெளியானது

முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்திய ஆட்சிப் பணி, காவல், சிறப்புத் திட்ட செயலாக்கம்

துரைமுருகன்: நீர்ப்பாசனம் துறை

உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

வருவாய்த்துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்

வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்

போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்

மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

செய்தி. விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

உணவுத்துறை அமைச்சர் சக்காபாணி

நிதி துறை அமைச்சர் PTR தியாகராஜன்

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன்

சுற்றுச்சூழல்துறை அமைச்சர் வி.மெய்யநாதன்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்

கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி

வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version