Home சற்றுமுன் அதிக வசூலில் இறங்கிய ஆம்னிகள்!

அதிக வசூலில் இறங்கிய ஆம்னிகள்!

மக்கள் சிரமம் இன்றி பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி அளித்துள்ள நிலையில் ஆம்னி பேருந்துகளின் கட்டணக்கொள்ளை தொடர்கிறது.

வருகின்ற மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. திங்கள் முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், 24 மணி நேரமும் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே 3135 பேருந்துகள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

மொத்தம் இரு தினங்களில் 9636 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

bus

இன்றும் நாளையும் தலா 1665 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறிய நிலையில், அதனை கண்டு கொள்ளாமல் கொள்ளை அடிக்கும் ஆம்னி குரூப்களின் விவரங்களை சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

சில பேருந்துகளில் விமான கட்டணத்தை விட, பேருந்து கட்டணம் அதிகமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version