June 25, 2021, 12:54 am
More

  ARTICLE - SECTIONS

  வைரமுத்து வகையறாக்களுக்காக… சினிமா இன்டஸ்டிரியவே மூடிடலாமா விஷால்? கிழிக்கும் நெட்டிசன்ஸ்!

  பள்ளியை கையகப்படுத்துவதில் நீங்கள் எல்லோரும் ஒரே புள்ளியில் இணைந்து குரல் கொடுப்பதும், குறியாக இருப்பதும் தான் பெரும் சந்தேகத்தை

  vishal srireddy
  vishal srireddy

  பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தலைகுனிய வைப்பது மட்டுமின்றி அந்தப் பள்ளியை மூட வேண்டும் என்பதையும் உணர வைக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களிடம் யாரும் ஒருமுறைகூட மன்னிப்பு கேட்கவில்லை. இந்தக் குற்றத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

  எத்தனையோ கிறிஸ்துவ பள்ளிகளிலும், சர்ச்சுகளிலும், மதரஸாக்களிலும் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு கிறிஸ்துவ பள்ளிகளையோ சர்ச்சுகளையோ மதரசாக்களையோ ஒட்டுமொத்தக் குற்றம் சுமத்தி, அவற்றை கையகப்படுத்த எவரும் முயற்சி செய்வதில்லை. குறைந்த பட்சம் அந்தக் குற்றவாளிகளை அல்லது குற்றம் சுமத்தப்பட்டவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துவது கூடக் கிடையாது.

  குற்றம் செய்பவர்களை பிடித்து உடனடியாக விசாரணைக்கு உட்படுத்துவது, இப்படிப்பட்டவர்களை உடனடியாகக் கண்டறிந்து தண்டிப்பது ஆகிய நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதுதான்.‌ ஆனால் அதற்காக ஒரு பள்ளியை கையகப்படுத்த வேண்டும் என்று உங்களைப் போன்ற ஒரு பக்கச் சார்பு நிலையாளர்கள் குரல் எழும்புவது பெருத்த அளவில் நம்மை சந்தேகப் பட வைக்கிறது. இத்தகைய கூக்குரல்களுக்குப் பின்னணியில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக., அரசும் உடந்தையா என்ற கேள்வி எழுகிறது இதற்கு பின்னால் இருக்கும் சதி என்ன என்று ஒவ்வொருவரையும் யோசிக்கத் தூண்டுகிறது, இந்த கள்ளத் தனம்!

  உங்கள் கவனம் எல்லாம் பாலியல் சீண்டல்களிலோ அல்லது பாதிக்கப் பட்ட மாணவிகளின் மீதோ அல்ல என்பதும், பள்ளியின் மீது மட்டுமே என்பதும் நன்றாகத் தெரிகிறது. ஏற்கெனவே வெளிநாட்டு பணம் பெருமளவில் மிஷனரிகள் மூலம் இங்கே ஆறாகப் பாய்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், அவர்களில் ஒருவராக நம் நாட்டுக்கு துரோகம் செய்பவராக இருப்பாரோ என்ற சந்தேகத்தை இது எழுப்பியிருப்பதாகக் கூறுகின்றனர் சமூகத் தளங்களில்.

  வட நாட்டில் சினிமா பிரபலங்கள் பலர், போதைப் பொருள் விற்பனையாளர்கள், வெளிநாட்டு தீவிரவாத கும்பல்கள் தொடர்பில் கைதானதை அறிவோம். அன்று சின்மயி குரல் கொடுத்த போது உங்கள் துறையில் நடக்கும் கேவலத்திற்கு வாய் திறக்காதது ஏன். ஆதரவு தராதது ஏன்? வைரமுத்து போன்று ஏகப்பட்ட பேர் மீது சினிமா துறையில் புகார்களும், நடவடிக்கைகளும் இருக்கிறது.

  ஆண்டாண்டு காலமாக நடிக்க வரும் பெண்களையும், நடிப்பாசை காட்டி, வாய்ப்பு வேண்டுமென்றால்.. என மிரட்டி தயாரிப்பாளர், இயக்குநர், சினிமாவில் மேனேஜர், அவனைத் தெரியும் இவனை தெரியும் நான் அவன் இவன் இப்படி எல்லாம் கூறி எத்தனை எத்தனை பெண்களை சீரழித்திருக்கிறது சினிமா உலகம். இவர்கள் தவறுக்கு சினி இன்டஸ்டிரிய மூடிடலாம்னு குரல் கொடுங்க பார்க்கலாம் என சமூக ஆர்வலர்களும், நெட்டிசன்ஸும் விஷாலை துவைத்துக் கிழிக்கின்றனர்.

  குரல் கொடுப்பதாக இருந்தால் எல்லாவற்றுக்கும் கொடுங்கள் அது கட்சி சார்ந்ததாகவும் ஜாதி மதம் சார்ந்ததாக இருக்கக் கூடாது‌… இப்போதும் தவறு செய்தவர்களுக்கு தண்டனை தேவைதான். அதற்காக பள்ளியை கையகப்படுத்துவதில் நீங்கள் எல்லோரும் ஒரே புள்ளியில் இணைந்து குரல் கொடுப்பதும், குறியாக இருப்பதும் தான் பெரும் சந்தேகத்தை விளைவிக்கிறது.

  vishal
  vishal
  vishal 1
  vishal 1
  vishal 3
  vishal 3
  vishal5
  vishal5
  vishal4
  vishal4
  vishal6
  vishal6
  vishal7
  vishal7
  vishal 8
  vishal 8
  vishal9
  vishal9
  vishal10
  vishal10
  vishal11
  vishal11

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  [orc]

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  24FollowersFollow
  74FollowersFollow
  1,264FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-