Home சற்றுமுன் வானொலி மூலம் உதவி கேட்ட மூதாட்டி! வீட்டுக்கே சென்று உதவிய காவல் துணை ஆணையர்!

வானொலி மூலம் உதவி கேட்ட மூதாட்டி! வீட்டுக்கே சென்று உதவிய காவல் துணை ஆணையர்!

madurai ac helping
madurai ac helping

வானொலி மூலம் உதவி கேட்ட மூதாட்டிக்கு வீட்டிற்கே சென்று உதவிக்கரம் நீட்டிய மதுரை மாநகர காவல் தலைமையிட துணை ஆணையர்!

மதுரை சுப்பிரமணியபுரம் 2-வது தெருவில் வசித்து வருபவர் கோமளவள்ளி.83 வயதான இவர் கணவனை இழந்த நிலையில் தனி நபராக டீக்கடை நடத்தி தனது வாழ்வாதாரத்தை கடத்தி வருகிறார். தளர்வுகளற்ற பொதுமுடக்கம் காரணமாக தனது டீக்கடையை நடத்தமுடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.


இந்த நிலையில், மதுரை மாநகர காவல் தலைமையிட துணை ஆணையர் பாஸ்கரன், கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

அப்போது , ரேடியோவில் உணவில்லாத ஆதரவற்றவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக காவல் துணை ஆணையர் பாஸ்கரன் தெரிவித்ததை வீட்டிலிருந்தபடியே ரேடியோவில் கோமளவள்ளி கேட்டுள்ளார். இதையடுத்து, ரேடியோவில் மதுரை மாநகர காவல் தலைமையிட துணை ஆணையர் பாஸ்கரன் கூறிய விலாசத்துக்கு, தனது இயலாத சூழ்நிலையை குறிப்பிட்டு கடிதமாக எழுதி மூதாட்டி அனுப்பியுள்ளார்.

madurai ac helping old aged women

கடிதம் கிடைத்தவுடன், மதுரை மாநகர காவல் தலைமையிட துணை ஆணையர் பாஸ்கரன், கோமளவள்ளியின் இல்லத்துக்கு நேரில் வந்து அரிசி, மளிகை சாமான்கள் மற்றும் பழங்களை வழங்கி ஆறுதல் வார்த்தைகள் கூறினார்.

மேலும், ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையம் மற்றும் தொண்டு நிறுவனத்தின் மூலம் மூதாட்டி கோமளவள்ளிக்கு 3 வேலை உணவளிக்கவும் ஏற்பாடு செய்தார்.

மதுரை மாநகர காவல் தலைமையிட துணை ஆணையர் பாஸ்கரன் மேற்கொண்ட உடனடி செயலை அப்பகுதி மக்கள் பாராட்டியதோடு கோமளவள்ளி சாதுர்யமாக வானொலியில் காவல் உயர் அதிகாரி பாஸ்கரன் கூறிய விலாசத்துக்கு கடிதம் எழுதி அனுப்பியதையும் பாராட்டினார்.

இந்த நிகழ்வில், மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய காவலர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் சோமசுந்தரம் உடனிருந்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version