October 27, 2021, 12:18 am
More

    ARTICLE - SECTIONS

    விமானத்தின் அவசர வழியின் வழியே கீழே குதித்த பயணி!

    pm flight - 1

    அமெரிக்காவில் புறப்பட இருந்த விமானத்தில் இருந்து பயணி ஒருவர் திடீரென கீழே குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து சால்ட் லேக் பகுதிக்கு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது.

    அந்த யுனைடெட் எக்ஸ்பிரஸ் விமானம் நகர்ந்து கொண்டிருந்த போது இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் திடீரென என அவசர கால வழியை திறந்து கீழே குதித்தார்.

    இதனால் விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். முதலில் அந்த நபர் விமானத்தை ஹைஜேக் செய்யப்போகிறார் என நினைத்து அனைவரும் அச்சமடைந்தனர்.
    ஆனால் அவர் அவசர கால வழியை திறந்து கீழே குதித்தார்.

    இதுகுறித்து விமானிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் விமானத்தை நிறுத்தினார். கீழே குதித்த நபரை மீட்டனர். அவர் உடலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

    அதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் கீழே குதித்ததற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,138FansLike
    368FollowersFollow
    40FollowersFollow
    74FollowersFollow
    1,589FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-