October 27, 2021, 12:42 am
More

  ARTICLE - SECTIONS

  இந்தியாவுக்கு எதிராக எழுத டூல்கிட் வெளியிட்டு … மூடுவிழாவை நோக்கி ‘தி நியூயார்க் டைம்ஸ்’!

  மூடுவிழாவை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வரும் பத்திரிகையாக தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை மாறிக் கொண்டே வருகிறது.

  tnyt - 1

  ‘இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் எழுத இந்தியாவில் ஆட்கள் தேவை’ என விளம்பரம் வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் ‛தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ்.

  பிரதமராக இரண்டாவது முறை மோடி வெற்றி பெற்றபோது, ‘பொய்ப் பிரசாரம், மத வெறுப்பு அரசியல் மூலம் இந்தியாவை மோடி மயக்கிவிட்டார். மோடியின் பெருவாரியான வெற்றியின் மூலம் சுமார் 20 கோடி இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் இருண்ட அரசியலிடம் இந்தியாவின் ஆன்மா தோற்றுவிட்டது’ என இந்த நாளிதழ் விமர்சனம் செய்தது.

  பின்னர், 2019 பிப்ரவரியில் நடந்த புல்வாமா தாக்குதல் குறித்து மார்ச் மாதம் வெளியிட்ட செய்தியில், ‘பாகிஸ்தானுடன் இந்தியா தெருநாய் சண்டையிடுகிறது’ என இந்திய ராணுவம் குறித்து மிகக் கீழ்த்தரமாக விமர்சனம் செய்தது.

  இந்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் போர்வையில் நடத்தப் பட்ட போராட்டத்துக்கு ஆதரவாகபிப்.17ஆம் தேதி முழுப்பக்க விளம்பரத்தை வெளியிட்டது.

  கடந்த மே மாதம் இந்தியாவில் கோவிட் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை, அரசு கூறுவதைக் காட்டிலும் 14 மடங்கு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக செய்தி வெளியிட்டது.

  இப்படி இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக, உண்மைக்குப் புறம்பாக செய்திகளை வெளியிட்டு வரும் ‛தி நியூயார்க் டைம்ஸ்’ தற்போது பிரதமர் மோடிக்கு எதிராக எழுத, இந்தியாவில் தகுதியான நிருபர் தேவை என விளம்பரம் செய்திருக்கிறது.

  இதை அடுத்து, உலகெங்கிலும் பலரும் அந்த இதழுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. பற்றி எரியும் விவாதம். மாட்டிக் கொண்டு திண்டாடும் நியூயார்க் டைம்ஸ்.

  அமெரிக்க பத்திரிகையில் மிக பிரபலமானது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை. அதில் செய்தி கட்டுரைகள் எழுதவும்…. இந்திய பொருளாதாரம் குறித்தான ஆய்வு செய்திகளை அவ்வப்போது வெளியிட….. பத்திரிகையில் எழுத… வேலைக்கு ஆட்கள் தேவை என்கிறார் போல விளம்பரம் கொடுத்து இருக்கிறார்கள்….. இதுவரையில் அனைத்தும் சாதாரண விஷயம்…. ஆனால் அந்த வேலைக்கான விருப்ப படிவத்தில்…என்ன மாதிரியான பணி… எந்த மாதிரியான கருத்தாக்கங்களை கொண்டவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று சொல்லி இருந்த காலத்தில்… சொல்லி இருந்த விஷயங்கள்… பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.

  மறைமுகமாக இல்லாமல் நேரடியாக சொல்லியிருக்கிறார்கள்….. இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்துஃபோபியா உருவாக்கி வருவது போலவே கட்டுரைகள் எழுதப்பட வேண்டும்… சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சமமாக நாளைய இந்தியா ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்ற கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதை மாற்றி எழுதும் கட்டுரையில் இந்திய நலன்களை பாதிக்கும் அம்சகளாகவே கட்டமைக்க வேண்டும் என்றெல்லாம் நீண்ட…. குறிப்புகளை அடுக்கிக்கொண்டே சென்றிருக்கிறார்கள்.

  இதனை பார்த்த நம்மவர்கள் இது மோதி மீதான அப்பட்டமாக தாக்கும் டூல் கிட் என்று சொல்லி நகர்ந்து இருக்கிறார்கள்…..

  tnyt2 - 2
  tnyt1 - 3

  ஆனால் சர்வதேச சமூகத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் அமெரிக்காவை நோக்கி கண்டனகனைகள் விடுத்து வருகிறார்கள். அமெரிக்காவின் செக்கரட்ரி ஆஃப் ஸ்டேட் என்ன செய்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று எல்லாம் வறுத்தெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். அமெரிக்காவின் ஜுடிஷில் அமைச்சு பலம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது….. அங்கேயே இது குறித்து கேள்வி கேட்டு இருக்கிறார்கள்.

  அமெரிக்காவின் அதன் நேச நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்கிற கொள்கை என்னவாயிற்று என்று அங்கு உள்ள செனட் சபை உறுப்பினர்களுக்கு கேள்வி கேட்டு மெயில் அனுப்பிய வண்ணம் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

  அன்று தொடங்கி இன்று வரை தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை அத்து மீறுவதும்….உலக நாடுகள் அதனை கண்டிப்பதுமாக போக்கு காட்டி வருகின்றனர்.

  முதன் முதலில் இந்தியா விண்வெளிக்கு செயற்கை கோள் அனுப்பின காலத்தில் இவர்கள்….. இந்த மாடு மேய்ப்பர்களுக்கு எதற்கு இந்த வேலை எல்லாம் என்று கருத்தை தாங்கிய கார்ட்டூன் தனது முதல் பக்கத்தில் வெளியிட்டு இருந்தனர்.

  ஆனால் தற்போதைய விவகாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

  இந்திய சீன எல்லைப் பகுதிகளில் உள்ள பிரச்சினையை காரணம் காட்டி தங்களை வளப்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்று குற்றச்சாட்டும் இதே பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

  இந்திய பாகிஸ்தான் பிரச்சினையின் போது இந்திய விமானி அபிநந்தன் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தான் பகுதியில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த அமெரிக்க தயாரிப்பு F16 ரக விமானத்தை வானில் வைத்து சுட்டு வீழ்த்தினார் என்று செய்தி வெளியிட்டு இருந்தனர் அந்த சமயத்தில்.

  tnytimes - 4

  இவையெல்லாம் தற்போது ஒன்று சேர்ந்து கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்துக்கொண்டு இருக்கிறார்களாம்.

  ரிப்போர்ட்டரா…. ஆக்டிவிஸ்டா என்பது வரை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன அங்கு.

  இந்த நான்கு நாட்களில் அமெரிக்காவில் பலர் தங்களது e paper subscription கேன்சல் செய்து இருக்கிறார்கள் என்றும் தகவல் உள்ளது. செய்தி தாள் சந்தாதாரர்களும் சரிவடைந்து வருகிறது.

  இது போலவே முந்தைய காலத்தில் பலர் இந்த பத்திரிகை நிறுவனத்தின் அடாவடி போக்கிற்காக இதில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள்.

  அதில் முக்கியமானவர் ஜேம்ஸ் பெனட். இவரது மூத்த சகோதரர் மைக்கேல் பெனட் அமெரிக்க செனட்டராக பதவி வகிக்கிறார்.

  அதுபோலவே ஃப்ஹாரி வெய்ஸ் என்பவர் தனது பதவி விலகலுக்கு இதே காரணங்களை கடந்த ஆண்டே குற்றமாக சுமத்தி…. பத்திரிகை தர்மத்தை மீறும் செயல் இது….. தம்மால் இதில் உடன்படமுடியாது என்று தெரிவித்து இருந்தார்.

  ஆக கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக…… பல முந்தைய கால விஷயங்களை இந்த தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை நிறுவனத்தை பலரும் குடைந்து கொண்டு இருக்கிறார்கள்.

  இதில் தான் சீனாவும் தற்போது மாட்டிக் கொண்டு இருக்கிறது. இதுவரை ஐம்பதாயிரம் டாலர்கள் செலவு செய்து இருக்கிறார்கள் என்பது வரை தோண்டி எடுத்து இருக்கிறார்…..இது ஜோபைடன் நிர்வாகத்திற்கு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  நிஜத்தில் அமெரிக்கா யார் பக்கம் என்றும்…… அல்லது மறைமுகமாக தேர்தல் சமயத்தில் சொன்னது போலவே சீன ஆதரவாக செயல்பட ஆரம்பித்து இருக்கிறார்களா என்று கேள்வி கேட்பது வரை அங்கு நடக்கிறது.

  tnyt3 - 5

  எல்லாம் சரி…..

  ஏன் இந்தியாவில் மூச்சு பேச்சே காணோம் என்று பார்த்தால்….. பெயர் வெளியிட விரும்பாத மூத்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஒருவர்…… எங்கே கேட்கிறார்கள் என்று அங்கலாய்க்கவே ஆரம்பித்து விட்டார்.

  ஒரு மாநில முதல்வராக இருந்த வரை தேர்தல் சமயத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவரே அவரை பார்த்து படுபயங்கரமான விதத்தில் மரண வியாபாரி என்று விமர்சனம் செய்து அவரை தேசிய அளவில் பிரபலப்படுத்தி விட்டனர்…… போதாக்குறைக்கு கட்சியை பலப்படுத்துவதை விட்டு விட்டு அவரை தொடர்ந்து எதிர்த்து இவர்கள் காணாமல் போய் கொண்டு இருக்கிறார்கள்……. தற்போது இதனை அமெரிக்க அளவிலும் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்….. எங்கே போய் முடியப்போகிறதோ என விசனப்பட்டுக்கொண்டார்.

  அந்த மனுஷன் பெட்ரோல் மாதிரி…

  எவ்வளவு பெட்ரோல் ஊற்றுகிறோமோ அவ்வளவு ஜாஸ்தியாக எரிப்பார் என்பதை இவர்கள் இன்னமும் புரிந்து கொள்ள வில்லை என்றே இந்நிகழ்வை விமர்சனம் செய்திருக்கிறார்.

  மூடுவிழாவை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வரும் பத்திரிகையாக தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை மாறிக் கொண்டே வருகிறது.

  பொறுத்து இருந்து பார்க்கலாம் என்ன நடக்கிறது என்பதை……

  💓 ஜெய் ஹிந்த்.

  கட்டுரை: ஸ்ரீ ராம்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,590FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-