spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாசிறுநீரக பாதிப்பு: உதவிகேட்டு நடிகை உருக்க வீடியோ பதிவு!

சிறுநீரக பாதிப்பு: உதவிகேட்டு நடிகை உருக்க வீடியோ பதிவு!

- Advertisement -

சிறுநீரகப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை, பொருளாதார உதவி கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியில் வெளியான கிரைம் பேட்ரோல் அந்தாலஜி தொடரில் நடித்து புகழ்பெற்றவர் அனயா சோனி (Anaya Soni). இவர் அதலாட், இஷ்க் மேய்ன் மர்ஜவான், ஹை அப்னா தில் தோ அவாரா உட்பட பல தொடர்களில் நடித்துள்ளார்.

இவருக்கு கடந்த 6 வருடத்துக்கு முன் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தன. இதையடுத்து அவர் தந்தை ஒரு சிறுநீரகத்தைக் கொடுத்தார்.

அதில் இருந்து ஒரு சிறுநீரகத்துடன் இயங்கி வந்த நடிகை அனயா சோனிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் சிறுநீரகப் பிரச்னை ஏற்பட்டது.

இதையடுத்து மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனையில் படுத்திருந்த படி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் உருக்கமாக பண உதவி கேட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது:
கடந்த சில நாட்களாக என் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. 2 சதவிகிதம் மட்டுமே அது செயல்படுகிறது. என் தாய் துணி வியாபாரம் செய்துவந்தார். சகோதரரும் நல்ல நிலையிலேயே இருந்தனர்.

சில நாட்களுக்கு முன் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதில் மொத்தமாக போய்விட்டது. வைத்திருந்த சேமிப்பு மருத்துவச் செலவுக்கே முடிந்துவிட்டது. இன்னும் செலவழிக்க பணமில்லை. எனக்கு உதவி தேவைப்படுகிறது. தயவு செய்து உதவுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe