October 22, 2021, 2:22 am
More

  ARTICLE - SECTIONS

  அட்ரஸ் கேட்பது போல் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த அயோக்கியன்! பட்டைய கிளப்பிய பாவனா!

  bhavana
  bhavana

  நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே உள்ளது. கற்பழிப்பு, கொலை போன்ற கொடுரமான குற்றங்கள் இளம்பெண்களுக்கு மட்டும் கிடையாது,

  பிறந்த பெண் குழந்தை முதல், 70 வயது பாட்டி வரை பாதிக்கப்படுகின்றனர். ஆனால், ஒரு கூட்டம் என்ன நடந்தாலும் பெனின் ஆடையில் குற்றம், நடத்தையில் குற்றம் என்று குறை கூறி கொண்டே உள்ளனர்.

  அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. பாவனா காஷ்யப், என்ற பெண் ஒருவர், அசாமின் கவுகாத்தியில் வசித்து வந்துள்ளார்.

  bike
  bike

  இவர் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 30) மாலை 4.30 மணியளவில் ஒதுக்குப்புறமான சாலை ஒன்றில் நடந்து சென்றுகொண்டிருந்த போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் வாகனத்தில் இருந்தவாரே அவரிடம் வழிகேட்டிருக்கிறார்.

  அந்த இளைஞர் கேட்ட விலாசம் தனக்கு தெரியாது எனவும் வேறு யாரிடமாவது கேட்டுக்கொள்ளுங்கள் என அவர் கூறியிருக்கிறார்.

  அந்த சமயம் திடீரென பாவனா காஷ்யப்பின் மார்பகங்களை தொட்டு மிகவும் அறுவறுப்பான முறையில் நடந்து கொண்டிருக்கிறார் அந்த நபர். ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்றே புரியாமல் திகைத்த பாவனா காஷ்யப் அந்த நபரின் செயலால் அதிர்ந்து போனார்.

  raj
  raj

  அந்த நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அந்த நபர் புறப்பட தயாரான போது, சுதாரித்துக்கொண்ட பாவனா, தனது முழு பலத்தையும் பயன்படுத்தி அந்த நபரின் ஸ்கூட்டரின் பின் டயரை அப்படியே தூக்கியிருக்கிறார், இதனால் அந்த நபரால் மேற்கொண்டு வாகனத்தில் செல்ல முடியவில்லை.

  இப்படியே சுமார் 30 நொடிகள் போராடிய பாவனா ஒருவழியாக இருசக்கர வாகனத்துடன் அந்த நபரை அருகே இருந்த சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்டுள்ளார்.

  தனது ஸ்கூட்டி சாக்கடைக்குள் விழுந்துவிட்டதால் அந்த நபரால் உடனடியாக அங்கிருந்து தப்ப முடியாமல் போனது. வேறு வழியில்லாமல் அவர் அங்கே சிக்கிக்கொண்டார்.

  இதன் பின்னர் அந்த வழியாக வந்தவர்கள் பாவனாவுக்கு துணையாக இருக்க, நடந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவாக எடுக்கத்தொடங்கினார்.

  அந்த நபரின் பெயர் மதுசனா ராஜ்குமார் என்பதும் அவர் கவுகாத்தியின் பஞ்சபாரி பகுதியைச் சேர்ந்தவர் எனவும், தெரியாமல் செய்துவிட்டேன் விட்டுவிடுமாறும் மன்னிப்பு கோரியுள்ளார்.

  raj 1
  ஏraj 1

  இருப்பினும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து மதுசனா ராஜ்குமாரை அவர்களிடம் ஒப்படைத்தார் பாவனா. தனக்கு நேர்ந்த இந்த கொடுமையை விளக்கி பெண்கள் துணிவுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி, அத்துமீறி நடந்து கொண்ட நபரை வளைத்துப்பிடித்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார் பாவனா.

  மேலும், பாவனாவிடம் அத்துமீறிய நபர் மீது தற்போது டிஸ்புர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தினமும் ஒரு ‘நிர்பயா’ பிறக்கக் கூடாது, அப்படி பிறந்தால் அத்தகைய மனநோய் மனப்பான்மை கொண்ட ஒரு மனிதன் பிறக்கிறான் என அவர் தெரிவித்துள்ளது பெண்களுக்கு பாடமாக மாறியிருக்கிறது.

  https://m.facebook.com/story.php?story_fbid=2081774441964701&id=100003964960582

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,575FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-