October 22, 2021, 11:31 am
More

    ARTICLE - SECTIONS

    விமானத்தில் பணிப் பெண்களின் அந்த பகுதியைத் தொட்டு அட்டூழியம் செய்த நபர்!

    berry
    berry

    விமான பயணத்தின் போது பணி பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    அமெரிக்கா ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை பிலடெல்பியா நகரத்தத்திலிருந்து மியாமி நகருக்கு சென்று கொண்டிருந்தது.

    இதனிடையே விமானத்தில் பயணம் செய்த மேக்ஸ்வெல் பெரி (Maxwell Berry) எனும் இளைஞர் குடிபோதையில் இருந்துள்ளார்.

    Max Berry
    Max Berry

    மேலும் விமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணிப்பெண்களை தொடுதல் போன்ற அநாகரிகமான செயல்களை செய்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து பெண் பணியாளர்கள் ஆண் பணியாளர் ஒருவரிடம் கூற அதை கேட்க வந்த ஆண் பணியாளரையும் தகாத வார்த்தைகள் பேசி முகத்தில் குத்தியுள்ளார்..

    இந்நிலையில் அந்த ஆண் பணியாளர் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உதவியுடன் அவரை இருக்கையில் தள்ளி டேப்பைக் கொண்டு கட்டியுள்ளார்.

    Max Berry 1
    Max Berry 1

    பின்னர் மியாமி விமான நிலையம் வந்தடைந்ததும் பெரி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    ஆனால் அவர் தொடர்ந்து கத்திக் கொண்டே வரும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,138FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,576FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-