தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், மூலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில் ஒரு மளிகைக்கடையில் கூலி வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது நாகராஜனுக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக, தனது சொந்த ஊருக்கு நாகராஜன் அழைத்து வந்தார்.
இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் இரவோடு இரவாக வந்து அந்தப் பெண்ணை அழைத்து சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜன், அன்று முதல் இன்று வரை சுய சிந்தனையற்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.
தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து, வாழ முடியாத சோகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நாகராஜன், இன்றுவரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் மனநலம் பாதிக்கப்பட்டு, மலைக்குன்றின் மீது வசித்து வருகிறார்.
எவ்வளவோ சிகிச்சைகள் அளித்தும் அவரின் அதிர்ச்சியை போக்கி, சகஜமான ஒரு வாழ்க்கை கொண்டு வர இயலவில்லை. 70 வயது உடைய அவரின் தாய் நஞ்சாய் மகனை எண்ணி விசனத்தில் வாடி வருகிறார்.
கடந்த 20 ஆண்டுகளாக நகராஜன் மலைக்குன்றின் மீது வசித்து வருகிறார். அவரை பிறந்த குழந்தை போல அவரின் தாய் இன்று வரை உணவு எடுத்துச் சென்று வழங்கி உயிர் காப்பாற்றி வருகிறார் தாய் நஞ்சாய்.
இது குறித்த செய்திகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரைப்படங்களில் வந்த இரு கதாபாத்திரங்களான ‘சேது விக்ரம்’, ‘காதல் பரத்’ நினைவுகூறும் வகையில் இவரின் வாழ்க்கை இருப்பதால், பலரும் நாகராஜனை எண்ணி வருத்தம் கொண்டுள்ளனர்.