January 18, 2025, 6:24 AM
23.7 C
Chennai

ஆம் ஆத்மி குறித்த உண்மைகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது: பிரசாந்த் பூஷண்

AAP-prashant-bhushan-yogendra-yadhav புது தில்லி: ஆம் ஆத்மி கட்சி தில்லியில் போட்டியிட்ட போது, அக்கட்சி வெற்றி பெறக்கூடாது என்ற வகையில் செயல்பட்டதாக, அக்கட்சியின் முக்கியத் தலைவர்களான யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோருக்கு எதிராக அக்கட்சியின் சில தலைவர்கள்குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் இருவரும் சதிச் செயலில் ஈடுபட்டதாகக் கடும் குற்றச் சாட்டு அவர்கள் மீது எழுப்பியுள்ளனர். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் உண்மை நிலையை, அக்கட்சி குறித்த உண்மைகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் இப்போது வந்து விட்டது என்று பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சி தில்லி தேர்தலில் பெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நிலையில், அக்கட்சிக்குள் திடீரென உள்கட்சி பூசல் வெடித்தது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் லேஜ்ரிவாலுக்கு எதிராக மூத்த தலைவர்கள் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் இருவரும் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனால் அவர்கள் இருவரும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப் படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இருவர் மீதே இத்தகைய சதிச்செயல் குற்றச்சாட்டுகளை மற்ற தலைவர்கள் சுமத்தியுள்ளனர். கடந்த புதன் கிழமை நடந்த ஆம்ஆத்மி செயற்குழுக் கூட்டத்தில் இருவர் குறித்தும் பேசப்பட்டுள்ளது. பிறகு யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் இருவரும் முக்கிய முடிவுகள் எடுக்கும் கட்சியின் ஆட்சி மன்றக் குழுவில் இருந்து நீக்கப்பட்டனர். இந்தக் குழுவில் கலந்து கொள்ளாமல் இருக்க அரவிந்த் கேஜ்ரிவால் சில நாடகங்களையும் நடத்தினார். தான் பத்து நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பெங்களுருவுக்கு சிகிச்சை பெறச் செல்வதாகக் கூறினார். இந்நிலையில் கேஜ்ரிவாலின் வலது கரமாகத் திகழும் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் கோபால் ராய், பங்கஜ் குப்தா, சஞ்சய் சிங் ஆகிய நால்வரும் சேர்ந்து கூட்டாக ஓர் அறிக்கை வெளியிட்டனர். அதில், தில்லி சட்டமன்றத்திற்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைய வேண்டும் என்று யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் இருவரும் நினைத்தனர். தேர்தலின் போது அவர்கள் இருவரும் கேஜ்ரிவாலுக்கு எதிராகவும், ஆம் ஆத்மிக்கு எதிராகவும் பல்வேறு சதிச் செயல்கள் செய்தனர். சட்ட மன்றத் தேர்தலில் ஆம்ஆத்மி 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைய வேண்டும். அப்படி நடந்தால்தான் நாம் ஆம் ஆத்மி தலைவர் பதவியில் இருந்து கேஜ்ரிவாலை மாற்ற முடியும் என்று தொண்டர்களிடம் பேசினர். பாஜக சார்பில் கிரண்பேடி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் யாதவ், பிரசாந்த் பூஷன் இருவரும் அதை வரவேற்றனர். கேஜ்ரிவாலை விட கிரண்பேடி மிகச் சிறந்த நிர்வாகத்தைத் தருவார் என்று பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களைக் கூறினர். வெளி மாநிலங்களில் இருந்து தில்லிக்கு பிரசாரம் செய்ய வந்த ஆம் ஆத்மி தொண்டர்களை யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன், சாந்தி பூஷன் மூவரும் தடுத்து நிறுத்தினர். மேலும் தில்லியில் இருந்த வெளி மாநில ஆம் ஆத்மி தொண்டர்களை பிரசாரத்துக்கு பயன்படுத்துவதையும் அவர்கள் தடுத்தனர். ஆம் ஆத்மிக்கு நிதி திரட்டுவதற்கும் மூன்று பேரும் முட்டுக் கட்டை போட்டனர். ஆம் ஆத்மி கட்சி குறித்து தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் கட்டுரைகள், செய்திகளை பத்திரிகைகளில் வரச் செய்தனர். பத்திரிகையாளர்களிடம் மறைமுகமாகக் பேசி ஆம் ஆத்மி கட்சியின் புகழை சரிப்பதில் குறியாக இருந்த னர். இவர்களது நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் விளக்கவே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது” என்று அதில் கூறப்பட்ட்டிருந்தது. இவ்வாறு, ஆம்ஆத்மி கட்சியின் 4 மூத்த தலைவர்கள் கடும் குற்றச்சாட்டுக்களை இருவர் மீதும் சுமத்தி அறிக்கை வெளியிட்டிருப்பது ஆம் ஆத்மி கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களிடையே விரிசல் அதிகமாகியுள்ளதையே வெளிப்படுத்தியது. இதனால், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் இருவரும் விரைவில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்கள் இருவரிடமும் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு இருவரும், ஆம் ஆத்மி கட்சி குறித்த உண்மை சொரூபத்தை மக்கள் அறிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்தனர். ஏற்கெனவே, அரவிந்த் கேஜ்ரிவால், ஓர் இயக்கத்தை தனது தனிப்பட்ட சொத்தாக மாற்றி தனிநபர் கட்சியாக மாற்றிக் கொண்டுவிட்டார் என்று பிரசாந்த் பூஷன் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், ஊழலுக்கு எதிரான ஓர் இயக்கம், கட்சியாக மாறி ஆட்சியைப் பிடித்ததும் கட்சிக்குள் விரிசல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் போக்கும், தலைமைக்குப் பிடிக்காதவர்களை வெளியேற்றும் செயல்களும் ஆம் ஆத்மி கட்சிக்குள் அரங்கேறி வருகிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை