Home உள்ளூர் செய்திகள் ரூ.8.75 கோடி வரிஏய்ப்பு.. நெஞ்சுவலி என நடித்து தப்பியோடிய திமுக பிரமுகர்!

ரூ.8.75 கோடி வரிஏய்ப்பு.. நெஞ்சுவலி என நடித்து தப்பியோடிய திமுக பிரமுகர்!

hospital

திருநெல்வேலியில் ரூ.8.75 கோடி வரிஏய்ப்பு புகாரில் விசாரிக்கப்பட்ட தொழிலதிபர் தப்பியோடிய நிலையில் வரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் இவரது மகன் பெரிய ராஜா என்ற எஸ்.பி ராஜா.

இவர் பாகிஸ்தான் உள்ளிட்ட சில வெளிநாடுகளில் இருந்து சிமெண்ட் இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது சிமெண்ட் விலை அதிகம் என்பதால் வெளிநாட்டு சிமெண்ட் விலை குறைவாக இருந்ததால் இவருக்கு விற்பனை சிறப்பாக நடந்ததாக கூறப்படுகிறது.

மேலும், குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்த பெரிய ராஜா பாளையங்கோட்டை அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் பதவியை விட்டுவிட்டு, அண்மையில் திமுகவில் இணைந்துள்ளார்.

இவர் GST வரியை குறைவாக கட்டுவதற்காக உள்ளீடு வரி தொடர்பாக பலருக்கு போலி பில்கள் தயாரித்து கொடுத்ததாக தெரிகிறது. அதில் அரசுக்கு பல கோடி ரூபாய் வரி இழப்பும் ஏய்ப்பும் மோசடியும் நடந்ததாக தெரிகிறது.

raja

இந்தநிலையில், வணிக வரித்துறை ஜி.எஸ்.டி பிரிவு அதிகாரிகள் பெரிய ராஜா மீது அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில், உடல் தகுதி சான்றிதழ் பெறுவதற்காக மருத்துவ பரிசோதனை செய்ய திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பெரிய ராஜா அழைத்து செல்லும் வழியில், தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து மருத்துவமணியில் அவருக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்த நிலையில், அங்கிருந்து பெரிய ராஜா தப்பி ஓடினார்.

இதுகுறித்து வணிக வரித்துறை அதிகாரிகள் திருநெல்வேலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version