புது தில்லி: மகாத்மா காந்தி ஒரு பிரிட்டிஷ் ஏஜென்ட் என்று நீதிபதி மார்கண்டேய கட்ஜு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இந்திய பிரஸ் கவுன்சில் முன்னாள் தலைவரும், முன்னாள் தலைமை நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு, அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திவைப்பார். அது அவரது வழக்கம். அவரது சர்ச்சைக் கருத்துகளில் தற்போது இடம்பெற்றிருப்பவர் தேசத்தந்தை மகாத்மா காந்தி. அவர் கூறிய கருத்து, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘காந்தி-ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட்’ என்ற தலைப்பில் சமூக வலைத்தளத்தில் அவர் எழுதிய கட்டுரைதான் அந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் கட்டுரையை எழுதிய சிறிது நேரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதனைத் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர். அந்தக் கட்டுரையில்,…. இந்தக் கட்டுரை எனக்கு கண்டனத்தைப் பெற்றுத் தரலாம். ஆனால், நாட்டு நலனுக்காக இதைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். மகாத்மா காந்தி, ஆங்கிலேயரின் ஏஜென்டாக இருந்து நாட்டுக்கு பெரும் தீங்கு இழைத்தார். இதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்தியா, பல்வேறு சாதி, மொழி, மதங்களைக் கொண்ட நாடு. இதை உணர்ந்த ஆங்கிலேயர்கள், பிரிவினைக் கொள்கையை பின்பற்றினர். காந்தியும் தன் பங்குக்கு பல ஆண்டுகளாக, அரசியலில் மதத்தைப் புகுத்தியதன் மூலம், ஆங்கிலேயரின் கொள்கைக்கு உரம் சேர்த்தார். அவர் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 1915-ம் ஆண்டில் இருந்து அவர் இறந்த 1948-ம் ஆண்டுவரை, அவர் தனது பேச்சிலும், எழுத்திலும் ‘ராமராஜ்யம், பசு பாதுகாப்பு, பிரம்மச்சர்யம், வர்ணாசிரமம்’ போன்ற இந்து மத தத்துவங்களை வலியுறுத்தி வந்தார். தன்னை ஒரு சனாதனி இந்து என்றும், வர்ணாசிரமத்தில் நம்பிக்கை உள்ளவன் என்றும் அவர் எழுதி வந்தார். அவரது கூட்டங்களில், ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்ற இந்து பஜன் ஒலிக்கும். இவையெல்லாம், முஸ்லிம்களை ‘முஸ்லிம் லீக்’ போன்ற முஸ்லிம் அமைப்புகளை நாடச் செய்தன. இது, ஆங்கிலேயர் பின்பற்ற நினைத்த ‘பிரித்தாளும் கொள்கை’க்கு உதவிய செயல்கள்தானே? பகத்சிங் போன்றவர்கள், ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சி இயக்கம் தொடங்கினர். ஆனால், காந்தி, சத்யாகிரக பாதைக்கு விடுதலைப் போராட்டத்தைத் திருப்பினார். இதுவும், ஆங்கிலேயருக்கு உதவியது போன்றதுதான். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது, கலவரத்தை கட்டுப்படுத்த காந்தி நவகாளி யாத்திரை சென்றார். அதனை பலரும் துணிச்சலான செயல் என புகழ்கிறார்கள். ஆனால், அவர்தான் அரசியலில் மதத்தை புகுத்தி, இந்தக் கலவரத்துக்கே வித்திட்டவர். முதலில் வீட்டைக் கொளுத்தி விட்டு, பிறகு தீயை அணைக்க முயற்சிப்பதுபோல் நாடகமாடினால் அது சரிதானா? என்று இந்தக் கட்டுரையில் அவர் கேட்டுள்ளார். 90% இந்தியர்கள் முட்டாள்கள், பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நாட்டின் குடியரசுத் தலைவராக வர விரும்புகிறேன் என்றெல்லாம் கருத்துகளைத் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் மார்க்கண்டேய கட்ஜு. தற்போது, காந்தி பிரிட்டிஷ் ஏஜென்டாக செயல்பட்டு நாட்டுக்கு கெடுதலை உண்டாக்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்திருந்த மக்களை ஒன்றிணைக்க காந்தியின் பஜனை நிகழ்ச்சிகளும், ரகுபதி ராகவ ராஜாராம் பாடல்களும்தான் உதவின என்பது இந்திய வரலாறு. காந்தியின் பசுவதை எதிர்ப்பு குறித்தும், அதன் பின்னணி குறித்தும் அவரது பேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துகளும்… அதற்கு பதிலளித்துள்ள வாசகர் வட்டக் கருத்துகளும்… பசுவதைத் தடையை சட்டத்தின் மூலம் நிறுத்த முடியாது என்று குறிபிடுவதற்காக காந்தியை அவர் தனது கருத்தின் மூலப் பொருளாக இழுத்துள்ளார்.
Less than 1 min.Read
“காந்தி ஒரு பிரிட்டிஷ் ஏஜென்ட்” : சர்ச்சையைக் கிளப்பினார் மார்க்கண்டேய கட்ஜு
Post by Markandey Katju.
Post by Markandey Katju.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week
உரத்த சிந்தனை
பவன் கல்யாண் என்ற தளபதி!
மிஷனரிகள் விஷ தீஷ்ணயம் தாண்டி தடைகளை உடைத்து திமிரி வரும் பவன் கல்யாண் போல்வாரை வாரி அணைத்து பாதுகாப்பது நமது கடமை
இந்தியா
ஹரியானா- ஹாட்ரிக் வெற்றி பெற்ற பாஜக.,! காஷ்மீரில் உமர் அப்துல்லா ஆட்சியமைக்கிறார்!
புள்ளி விவரங்களைப் பார்க்கையில் ஜம்மு - காஷ்மீர் தேர்தல் காங்கிரசின் தோல்வியாகவே கருதப்படுகிறது. குறிப்பாக பகுதி வாரியாக ஜம்முவின் அனைத்து தொகுதிகளையும் குறி வைத்த பாஜக.,வின் திட்டத்திற்கு பெருமளவு பலன் கிடைத்துள்ளது
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – அக்.09 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சுய முன்னேற்றம்
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!
நலவாழ்வு
‘நிமுசுலைடு’ மாத்திரைகளை குழந்தைகளுக்கு பரிந்துரைக்க தடை!
நிமுசுலைடு (Nimesulide) என்ற மாத்திரை, கால் வலி, மூட்டு வலி, காது, மூக்கு, தொண்டை வலி, தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு தீர்வை அளித்து வருகிறது.
Topics

இந்திய விமானப் படை தினம் இன்று!
அடுத்த வரும் நான்கு ஆண்டுகளில் வானில் பறக்கும் போர் விமானங்கள் இந்திய தயாரிப்பாக இருக்கும். அல்லது இந்தியாவில் தயாரான உதிரி பாகங்களை கொண்டதாக இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.
சற்றுமுன்
ஆன்லைன் பட்டாசு வியாபாரத்தில் மோசடி: தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கம்!
சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜாசந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் அக்.08- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...