Home உள்ளூர் செய்திகள் இன்னும் தொடங்கவே இல்லை.. அதற்குள் முடிவதா..? வெளிநாட்டில் இருந்து ஆசையோடு வந்த இளைஞர்..!

இன்னும் தொடங்கவே இல்லை.. அதற்குள் முடிவதா..? வெளிநாட்டில் இருந்து ஆசையோடு வந்த இளைஞர்..!

Trichy airport 1

வெளிநாட்டில் வேலைக்குச் சென்று 5 வருடம் கழித்து மனைவி, குடும்பத்தினரைப் பார்க்க வந்தவர் விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை கோலாலம்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சிக்கு வந்தது. இந்த விமானத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் பயணம் செய்தார். விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியது.

பயணிகள் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு வெளிவந்தனர். ஆனால் வேல்முருகன் மட்டும் சீட்டிலே தலையை சாய்ந்தவாறு கண்ணை மூடி உட்கார்ந்திருக்கிறார். விமான நிலைய ஊழியர்கள் அவரிடம் சென்று பார்த்த போது உடல் அசைவின்றி இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக விமான நிலைய மருத்துவர் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். விமானத்திற்குள் வந்த மருத்துவர்கள் அவரை சோதனை செய்தபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்தது விட்டதாக தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

vel murugan

இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் வேல்முருகனின் உறவினர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிந்த விமான நிலைய காவல் துறையினர், விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் நீர்ப்பழனி அருகே உள்ள கிராமம் நரியப்பட்டி.. இங்கு வசித்து வரும் ஆறுமுகம் என்பவரின் மகன் வேல்முருகன்.. 36 வயதாகிறது.

கடந்த 2017-ல் இவருக்கு நிஷாராணி என்பவருடன் திருமணம் நடந்தது.. ஆனால், திருமணமான, 2 மாதத்திலேயே மலேசியாவில் வேலை கிடைத்துள்ளது.

Velmurugan 1

மணப்பாறையை சேர்ந்த ரவி மற்றும் அவரது மகன் ரவிராஜ் ஆகியோர் மலேசியாவில் சொந்தமாக சலூன் கடை வைத்துள்ளனர்.. அந்த கடையில்தான் வேல்முருகன் வேலைக்கு சென்றார்
.. 5 வருடங்கள் அங்கு சலூனில் வேலை பார்த்து வந்துள்ளார்..

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே வேல்முருகனுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது..

இந்நிலையில் வேல்முருகனுக்கு ஒப்பந்த காலம் முடிந்து ஊர் திரும்ப வேல்முருகன் முற்பட்டபோது,

ஓனர் ரவி என்பவர் இறந்துவிடவும், அவரது மகன் ரவிராஜ்தான் அந்த கடையை எடுத்து நடத்தி உள்ளார்.. அந்த ஊரில் சலூன் கடையில் வேறு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதால், வேல்முருகனை சொந்த ஊருக்கும் அனுப்பாமல், அதே கடையில் தொடர்ந்து வேலை பார்க்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.. இதனால் உடல்நிலை மேலும் பாதித்துள்ளது.. கடையில் ஆள் இல்லை. நீங்கள் தான் வேலை பார்க்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தி வேலை வாங்கியிருக்கிறார்கள்.

ambulance 1

வேல்முருகனைத் தமிழகத்திற்குத் திருப்பி அனுப்பும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை என்பதை தெரிந்துகொண்டவர் நடந்தவற்றைத் தனது குடும்பத்தாரிடம் சொல்லியிருக்கிறார். அவர்களும் பதறிப்போய், “தம்பி நமக்குப் பணம் முக்கியம் இல்லப்பா, நீ எப்படியாவது ஊருக்கு வந்திருப்பா” என்று சொல்லி அவர்களே டிக்கெட் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

அவரும் ஒருவழியாகத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று மலேசியாவிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏறி வந்தபோது நடுவானில் வரும்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிர் இழந்துவிட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் சொன்னார்கள். அதன் பிறகு தான் நாங்கள் இங்கு வந்தோம்” என்று தழுதழுத்தார்கள்.

“ஐந்து வருடமா குடும்பத்தைப் பிரிந்து இருக்கேன். இன்னும் ரெண்டு நாள்ல குடும்பத்தை பார்க்கபோறேன்னு சொல்லிவிட்டு கிளம்புனியேப்பா. இன்னைக்கு செத்து பிணமா வந்திருக்கியேன்னு” அவரது மனைவி நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறும் சத்தம் காண்போரைக் கண்கலங்க வைத்துவிட்டது.

mrs Velmurugan

5 வருடமாக குடும்பத்தை பார்க்கவில்லை, இன்னும் 2 நாளில் வந்து எல்லாரையும் பார்த்துவிடுவேன் என்று வேல்முருகன் போனில் சொல்லி கொண்டே இருந்தாராம்.

இந்த சம்பவம் குறித்து வேல்முருகன் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. அதுமட்டுமல்ல, வேலைக்கு அழைத்து சென்றவர்கள், உழைப்பை மட்டும் இப்படி உறிஞ்சிக் கொண்டு, உடம்பு சரியில்லாதவருக்கு சிகிச்சைகூட தராமல் இருந்துள்ளனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version