October 23, 2021, 8:51 pm
More

  ARTICLE - SECTIONS

  அர்ஜூனன் கண்ணனின் தோழனான கதை!

  krishnar 2
  krishnar 2

  தேவராஜனான இந்திரன், அமராவதியின்
  வாசலுக்கு வெளிப்புறம், ஐராவதத்தின் மீது கவலையுடன் அமர்ந்திருந்தான். அப்பொழுது எண்ணிலடங்காத சூரியக் கிரணங்கள் ஒன்று சேர்ந்து வருவது போன்ற ஓர் ஒளிப்பிழம்பு தோன்றியது

  இந்திரன் ஏதோ மனக்கிலேசத்துடன் அந்த ஒளி வந்த இடத்தையே உற்று நோக்கினான். அந்த ஒளிப்பிழம்பிலிருந்து தேவாதிதேவனின் மகாசுரபியான காமதேனு தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள்.

  இந்திரன், ஐராவதத்திலிருந்து கீழே இறங்கி அச்சுரபியை வணங்கிக் கொண்டான். கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கி எல்லாரையும் காத்த பீதாம்பரதாரிக்குத் தான் இழைத்த அந்த விபரீத வினையை நினைத்து நினைத்து மனம் மருகிக் கொண்டிருந்த இந்திரனுக்கு அப்பொழுதும் அதே நினைப்பினால் உடல் லேசாக நடுங்கிக் கொண்டுதான் இருந்தது.

  “ஏன் நடுங்குகிறாய் இந்திரா? பிரும்ம தேவன் உனக்கு என்மூலம் ஒரு தகவலை
  அனுப்பியிருக்கிறார்.” என்றது காமதேனு. இந்திரனுக்கு மேலும் உடல் நடுக்கமுற்றது. ‘ஸ்ரீஹரிக்குத் தீங்கிழைத்தால் முக்கண்ணனும், பிரும்மதேவனும் லேசில் விட்டு விடுவார்களா என்ன?’ என்கிற பயம் உள்ளூர ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.

  krishna
  krishna

  சுரபி தொடர்ந்தது.

  “நீ எதற்காக இப்படி அஞ்சுகிறாய் என்பது எனக்குத் தெரியும். கிருஷ்ணருக்கு நீ தீங்கிழைத்தாலும். அவர் உன்னுடைய சிறுபிள்ளைத் தனமான விளையாட்டைப் பொறுத்துக் கொள்ளும் பரம கருணாமூர்த்தியாவார். அது உனக்கே கூடத் தெரியும். அதனால் அதைப் பற்றி நீ கவலைப்படாதே’
  “வேறு எதற்காக என்னிடம் தூது வந்திருக்கிறாய் தாயே? அதைச் சிறிது
  சீக்கிரமாகவே கூறிவிட்டால் நானும் நிம்மதியாக இருப்பேன் இல்லையா?”

  அழகாகச் சிரித்தாள் சுரபி அன்னை.

  “நீ என்னுடன் பிருந்தாவனத்திற்கு வரவேண்டும். ‘பசுக்களின் இந்திரன்’ என்னும் பதவியை கோவிந்தன் பெறவேண்டும். அவர் அப்பதவியை அடைய, இந்திரனாகிய நீயே மயிற்பீலி
  மகுடனுக்கு அபிஷேகம் செய்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும். இதை கூறவில்லை. பிரும்மதேவன் கூறிய செய்தி” என்றது சுரபி.

  krish 1
  krish 1

  காமதேனு எவ்வளவு கூறியும், இந்திரனுக்கு பயம் தெளிந்ததாகத் தெரியவில்லை. “அன்னையே! நீங்களும் என்னோடு பிருந்தாவனத்திற்கு வாருங்களேன்!” என்று துணைக்கு சுரபியைக் கூப்பிட்டான் இந்திரன்.

  காமதேனுவும் ஐராவதத்தில் ஏறிக் கொண்டாள். இருவருமாக பிருந்தாவனத்தை அடைந்தார்கள்.

  திவ்ய பூமியில் கால்பட்டாலே போதுமே! ஏழேழு ஜன்ம பாபங்களும் நொடியில் விலகி விடாதா?

  அந்த நீலமேக சியாமளன் குன்று ஒன்றில் தனியாக அமர்ந்திருந்தார். பலராமரும் மற்ற ஆநிரைச் சிறுவர்களும் சற்றுத் தொலைவில் விளையாடிக் கொண்டிருதார்கள்.

  சகோதரன் அருகே இல்லாமல் கிருஷ்ணர் தனித்திருக்கும் சமயமே மிக அபூர்வமான விநாடிகள்தான்.

  இந்திரன், ஐராவதத்திலிருந்து இறங்கினான். சுரபியும் இறங்கி, தன்னை மறைத்துக் கொண்டது.

  இந்திரன், நெடுஞ்சாண்கிடையாக கிருஷ்ணரின் காலடியில் விழுந்து, தன்னை மன்னித்து விடுமாறு கதறினான்.

  indra
  indra

  ‘என்னருமைப் புரந்தரனே! நீ எனக்குக் கொடுமையெதுவும் இழைத்து விடவில்லை. மாறாக என் மக்கள் எல்லாரையுமே என்னருகில் ஒன்று சேர்த்தல்லவா வைத்தாய்?” என்றார், அந்தக் கருணாமூர்த்தி கருணையோடு.

  கோபாலன் அமர்ந்திருந்த குன்றின்மேல்
  பூஜைப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆகாய கங்கையின் நீரை எடுத்துவரும்படி இந்திரன், ஐராவதத்திற்குக் கட்டளையிட அதுவும் தன்னுடைய எட்டு துதிக்கைகளினாலும் தங்கக் கலசங்களில் ஆகாய கங்கையின் நீரை நிரப்பிக் கொண்டு வந்தது.

  ஐராவதம், அக்கலசங்களிலிருந்த நீரை, தாமரைக் கண்ணனின் மேல் பாயும்படி அபிஷேகம் செய்தது.

  காமதேனுத் தாய், தன் மடியிலிருந்து பாலை வெளியேற்றி, அந்தத் தாமோதரனுக்கு அபிஷேகம் செய்யும் பொருட்டு அவருக்கு நேரே ஆகாயத்தில் நின்றபடி செயலாற்றினாள்.

  புஷ்பார்ச்சனை மற்றும் அலங்காரத் திரவியங்களால் முடித்தான் இந்திரன். முழுமையான அபிஷேகத்தை முடித்தான் இந்திரன்.

  தான் செய்த பாபத்திற்குப் பிராயச்சித்தமாக அபிஷேக ஜலத்தை ப்ரோக்ஷணம் செய்து கொண்டு உள்ளுக்கும் அருந்தினான்.

  “மதுசூதனா இனி நீங்கள் பசுக்களின் இந்திரனாகி விட்டீர்கள். கோவிந்தன் ஆகி விட்டீர்கள். இனி ஐப்பசியும், கார்த்திகையும் தங்களுடைய பூஜைக்கு உண்டான மாதங்கள் எனப்படும். மார்கழி மாதம் உங்களுடைய மாதமாகத் திகழும் என்று இந்திரன். தழுதழுத்தாள்

  மேலும் தொடர்ந்தான். “எனக்கு தங்களிடமிருந்து ஒரு வரம் வேண்டும். அருளுவீர்களா கண்ணா?” என்றான்.

  தயக்கம்? கேட்சு வேண்டியதுதானே என்றார் வனமாலி, .

  “குந்திதேவிக்குப் பிறந்த எள்மகள் அர்ஜுவனை, தாங்கள் தங்களுடைய நண்பனாக ஏற்றுக் கொள்ள வேண்டும். என்னுடைய பிரதிநிதியான அவன் தங்களின் கட்டளைப்படியே நடப்பான். நான் தங்களுக்குச் சேவை செய்வதாக நினைத்துக் கொண்டு அவனை நீங்கள் ஏற்க வேண்டும். செய்வீர்களா பிரபோ?” என்று கேட்டான் இந்திரன்.

  “என்னுடைய நிரந்தரத் ‘தோழனாக அர்ஜுனனை ஏற்றுக்கொண்டு, என்றென்றும் அவனைக் காப்பேன். கவலைப் படவேண்டாம்” என்று கூறிய ஸ்ரீகிருஷ்ணரை வணங்கி விடைபெற்றனர் இந்திரனும் காமதேனுவும். அதேசமயத்தில் பலராமர், ஆயர்ச் சிறுவர்கள் எல்லாரும் அவ்விடம் வந்து சேர்ந்தார்கள்.

  நடந்தவற்றைக் கேள்விப்பட்டவர்கள், “கோவிந்தா, கோவிந்தா, கோபாலா” என்று
  கூறியபடி கரகோஷம் செய்து நடனமாடி தங்களின் மகிழ்ச்சியை ஆரவாரத்துடன் வெளிப்படுத்தினார்கள்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,137FansLike
  368FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,580FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-