October 24, 2021, 3:16 am
More

  ARTICLE - SECTIONS

  கேரளத்தின் முஸ்லிமல்லாத சிறார்கள் ‘போதைப்பொருள் ஜிஹாத்’துக்கு இலக்காகிறார்கள்: பிஷப் ‘பகீர்’ தகவல்!

  லவ் ஜிகாத் அச்சுறுத்தல் அதிகரிப்பு, கேரளாவில் மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் பாதிக்கிறது. மாநிலத்தில் லவ் ஜிஹாத் மூலம்

  Mar Joseph Kallarangatt Kerala Bishop
  Mar Joseph Kallarangatt Kerala Bishop

  கேரளாவின் முஸ்லிமல்லாத சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் ‘லவ் ஜிஹாத்’ மட்டுமல்ல ‘போதைப்பொருள் ஜிஹாத்’ மூலமும் இலக்கு வைக்கப்படுவதாக சிரோ-மலபார் சர்ச்சின் பாலா மறைமாவட்டத்தின் பிஷப் மார் ஜோசப் கல்லரங்கட் பகீர் தகவல் வெளியிட்டுள்ளார்.

  கேரள கௌமுடியில் உள்ள செய்தியின்படி , மதமாற்றம் மற்றும் சுரண்டலுக்காக இஸ்லாமிய குழுக்களால் இளம் கிறிஸ்தவர்களை குறிவைப்பது குறித்து பிஷப் குரல் கொடுத்துள்ளார்.

  பிஷப் ஜோசப் கல்லரங்கட் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், மாநிலத்தில் லவ் ஜிஹாத்துடன் சேர்ந்து போதைப்பொருள் ஜிஹாதின் மூலமும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் அல்லாத சிறுவர் சிறுமிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது… என்றார். மேலும், பிஷப் கூறுகையில், கேரளாவில் முஸ்லீம் அல்லாத இளைஞர்களை குறிவைத்து இழுப்பதற்கு உதவி வழங்கும் குறிப்பிட்ட குழுக்கள் செயல்படுகின்றன… என்று தெரிவித்தார். பிஷப் இவ்வாறு கூறிய நிகழ்வின் காணொளி குறவலிங்க சர்ச்சால் பொதுவெளியில் பகிரப்பட்டது .

  முறையற்ற மதமாற்றம் மற்றும் முறைகேடாக கையாளப்படுதலை முன்னிலைப்படுத்திய பிஷப் ஜோசப் மேலும், இஸ்லாமிய மதமாற்றம் மற்றும் போதை பழக்கத்திற்கு இந்து மற்றும் கிறிஸ்துவ இளைஞர்களை இலக்காகக் கொண்டு கேரளா முழுவதும் சிறப்பு குழுக்கள் செயல்படுகின்றன. அவர்களின் நோக்கம் ஆயுதங்கள் கொண்டு சண்டையிடாமல் முஸ்லீம் அல்லாத மதங்களை அழிப்பதாகும் என்றார் பிஷப்!

  பிஷப் மார் ஜோசப் கல்லரங்கட் மேலும் கூறுகையில்… கேரளா பயங்கரவாதிகளுக்கான ஆள்சேர்ப்பு மையமாக மாறியுள்ளது என்று பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஏற்கெனவே கூறியுள்ளனர்! மேலும் இதுபோன்ற குழுக்கள் இளைஞர்களை தங்கள் ஸ்லீப்பர் செல்களாக பயன்படுத்த முயற்சிக்கின்றன… என்றார்.

  பிஷப் ஜோசப் மேலும் கூறுகையில், இந்தக் குழுக்கள் உலகெங்கிலும் இஸ்லாத்தை நிறுவுவதற்கான காரணத்தை போர் மூலமோ அல்லது வேறு எந்த வழியிலோ பிரச்சாரம் செய்கின்றன. உலகெங்கிலும் உள்ள ஜிஹாதி பங்கரவாதிகள் இனவெறி, மதவெறி, வெறுப்பு ஆகியவற்றை ஊக்குவிக்க முயல்கின்றனர், மேலும் ஹலால் சர்ச்சையும் இதன் ஒரு பகுதியாகும்… என்றார். பிஷப் முன்னதாக ‘லவ் ஜிஹாத்’ தூண்டில்களுக்கு எதிராக சுற்றறிக்கை எச்சரிக்கையை வெளியிட்டிருந்தார்.

  பிஷப் மார் ஜோசப் கல்லரங்கட் சமீபத்தில் பாலா மறைமாவட்டத்தில் உள்ள தங்கள் சமூக உறுப்பினர்களிடையே ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார்! லவ் ஜிஹாத் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக தங்கள் சர்ச் குடும்பங்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்தார்.

  “நம் பெண் குழந்தைகளை பல்வேறு தந்திரோபாயங்களுடன் சிக்க வைக்க முயற்சிக்கும் பல்வேறு பிரிவுகள் மற்றும் குழுக்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும்” என்று கடிதத்தின் தொடக்க வரிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

  கேரளாவில் உள்ள கிறிஸ்துவ மதத் தலைவர்கள் லவ் ஜிஹாத்துக்கு எதிராக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். முன்னதாக, கேரளா கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில் (கேசிபிசி), மாநில மற்றும் மத்திய அரசை இந்த விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டு, “பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போவது” குறித்து சரியான விசாரணை நடத்தவில்லை என்று கடுமையாகச் சாடியது.

  சிரோ மலபார் சர்ச்சின் ஊடக ஆணையத்தால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் , கேரளாவிலிருந்து ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமிய அரசில் இணைந்த 21 பெண்களில் பாதி பேர் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அதன் பிஷப் கூறியிருந்தார்.

  “லவ் ஜிகாத் அச்சுறுத்தல் அதிகரிப்பு, கேரளாவில் மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் பாதிக்கிறது. மாநிலத்தில் லவ் ஜிஹாத் மூலம் கிறிஸ்துவ பெண்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்பது உண்மை “என்று சினோட் செய்திக்குறிப்பில் வெளிப்படையாகக் கூறினார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  39FollowersFollow
  74FollowersFollow
  1,585FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-