Home உலகம் தங்கையின் இன்டர்வியூவில் சென்று அடி வெளுத்த அக்கா! வைரல் வீடியோ!

தங்கையின் இன்டர்வியூவில் சென்று அடி வெளுத்த அக்கா! வைரல் வீடியோ!

interview
interview

இன்டர்நெட்டில் வினோதமான சம்பவங்கள் அடிக்கடி நிகழும் அவற்றில் பல வீடியோக்களாக எப்படியாவது பதிவாகி வெகு மக்களை சென்று சேரும்.

தற்போது அனைவரிடத்திலும் செல்போன், கேமரா, எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் உள்ளதால், எல்லா சம்பவங்களும் விடியோ வடிவில் நம்மை வந்து சேர்ந்து விடுகின்றன.

சமுக வலைதளங்கள் வைரல் வீடியோக்கள் பலவற்றால் நிரம்பியுள்ளன. சமீபத்திய வைரல் வீடியோ ஒன்றில், ஒரு பெண் தனது சகோதரியின் நேர்முக தேர்வில் இடையில் சென்று தடுத்து நிறுத்தி அவரைத் தாக்கியதை காட்டும் வீடியோ பதிவாகி உள்ளது.

அந்த பெண்ணுடைய கணவருடன் அவர் தங்கை உறங்கியதாகவும், அதை அறிந்த அவர் நேரடியாக வேலைக்கான நேர்முக தேர்வு நடைபெறும் இடத்திற்கு சென்று அவரை தாக்கினார் என்று தெரிகிறது.

இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி, நெட்டிசன்களை குலுங்கி குலுங்கி சிரிக்கவைத்துள்ளது. இந்த வீடியோ சனிக்கிழமை டல்லாஸ் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டு மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது.

அந்த வீடியோவின் தலைப்பில், “மனைவி தன் கணவனுடன் உறங்கிய சகோதரியின் நேர்முக தேர்வை அடித்து நொறுக்கினார்” என்று எழுதியிருந்தது.

வீடியோவில், ஒரு கோபம் கொண்ட பெண் ஒரு அலுவலக அறைக்குள் வருகிறார், அங்கு தனது சகோதரி வேலைக்கான நேர்முக தேர்வில் இருக்கிறார், ​​தனது கணவருடன் உறங்கியதாக கூறி அவளை அடித்து உதைப்பதை அந்த வீடியோ காட்டுகிறது.

தேதி இடப்படாத அந்த வீடியோவை அலுவலகத்திற்குள்இருந்து யாரோ ஒருவர் படம்பிடித்திருக்கலாம், அதில் இரண்டு சகோதரிகளுக்கு இடையிலான முழு சண்டையையும் பார்க்க முடிகிறது. முழு சண்டையும் முழுதாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இது மகிழ்ச்சியான, வேடிக்கையான சம்பவமாக இல்லாவிட்டாலும், இது வீடியோவாக பகிறப்பட்ட போது, கேலிக்குள்ளானது. பதிவின் கமென்ட் பிரிவில் நகைச்சுவையான கருத்துகளையும் மீம்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டதால், இது காண்போர் அனைவரையும் சிரிக்கவைத்தது.

இந்த பதிவு பல்வேறு பயனர்களால் சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டது, எல்லா தளங்களிலும் இதுபோன்ற ட்ரோல் கருத்துகள் இருந்தன. “அவர் தங்கைக்கு வேலை கிடைத்திருக்குமா?”, “நேர்காணல் செய்பவர்: நாங்கள் உங்களை மீண்டும் அழைப்போம்” என்று கூறியிருப்பார்களா, “அதே கோபத்தை தன் கணவரிடமும் காட்டியிருப்பாரா அந்த பெண்?” போன்ற கமென்ட்டுகள் நிறைய வந்தன.

இதற்கிடையில், பல பயனர்கள் வன்முறையைப் பற்றி எழுதினார்கள், மேலும் இதுபோல ஏமாற்றப்படுவதற்கு, நாம் மற்றவர் மீது குற்றம் சாட்டுகிறோம் என்றும், வாழ்க்கைத் துணையை குற்றம் சாட்டுவது அல்ல என்றும் சிலர் கூறியிருந்தனர்.

ஒரு பயனர் எழுதினார், “அந்தக் கோபமெல்லாம் அந்தக் கணவனிடம் போக வேண்டும். பெண்களும் தங்கள் வாழ்க்கை துணையின் துரோகத்திற்கு பெண்களை அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்கள்.” என்ற அட்வைஸ் கமெண்டுகளும் பல வந்திருந்தன.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version