October 25, 2021, 6:26 pm
More

  ARTICLE - SECTIONS

  ட்ரோனில் இருந்து உணவை கிழே தள்ளிய காகம்! வைரல்!

  crow
  crow

  ஆஸ்திரேலியாவில் ட்ரோன்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு மேற்கொண்ட நிலையில், வானில் பறந்து சென்ற காகம் அதனை சண்டையிட்டு கீழே தள்ளிய நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  இன்றைய சூழலில் வீட்டில் விதவிதமாக சமையல் செய்து சாப்பிடும் பழக்கம் அனைத்தும் மறைந்துப் போய் கொண்டிருக்கிறது. யாராவது உறவினர் வந்தாலும், வீட்டில் விஷேசம் என்றாலும் தவிர்க்க முடியாத சில நேரங்களில் மட்டும் தான் நாம் உணவுகளை ஹோட்டலில் ஆர்டர் செய்து வாங்குவோம்.

  ஆனால் தற்போது தவிர்க்க முடியாத நிலையில் தான் வீட்டில் சமைக்கத் தொடங்குகிறோம். அந்தளவிற்கு மக்கள் பிஸி வாழ்க்கைக்கு மாறிவிட்டனர் என்று தான் கூற வேண்டும்.

  குறிப்பாக கணவன் -மனைவி இருவரும் வேலைக்கு செல்கிறார்கள் எனில் அவர்கள் வீட்டில் பெரும்பாலும் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடும் நடைமுறைதான் இருக்கும் .

  இப்படி மக்களுக்கு உணவுகளை வழங்குவதற்கு சுவிக்கி, ஸ்மோட்டோ போன்ற உணவு விநியோக முகவர்கள் உள்ளனர். மொபைலில் ஆர்டர் செய்தால் போதும் வெறும் 30 நிமிடங்களில் நம் வீடு தேடி அனைத்து வகையாக உணவுகளும் வந்து சேர்ந்துவிடும்.

  இந்நிலையில் மேலும் வாடிக்கையாளர்களுக்கு இன்னமும் குறுகிய நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செய்த உணவுகளை வழங்க வேண்டும் என்பதற்காக ட்ரோன்கள் மூலம் உணவு விநியோகம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

  இதனால் வேடிக்கையான பல நிகழ்வுகள் நடக்கும் என கூறப்பட்ட நிலையில் தான் தற்போது அப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

  ஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பராவில் உள்ள ஒருவர் தனக்கு பிடித்தமான உணவை ஆர்டர் செய்திருக்கிறார். வழக்கம் போல ட்ரோன்களின் மூலம் உணவு விநியோகம் நடத்தப்பட்டுள்ளது.

  வானில் உணவு பார்சலுடன் சென்ற ட்ரோனைப்பார்த்த காகம் ஒன்று, என்ன இது புதுசா இருக்கே? இதுவரை நாம் இப்படிப்பட்ட ஒன்றை பார்த்தது இல்லை என யோசித்த நிலையில், அதன் அருகில் பறந்து சென்றது. அருகில் சென்றதும் வித்தியாசமாக ஒன்று சுற்றுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காகம் டெலிவரி ட்ரோனுடன் சண்டையிடுகிறது.

  இதனையடுத்து உயரத்தில் இருந்து பார்சலை கீழே போட்டுவிட்டது. மேலும் இதுபோன்ற சில நிகழ்வுகளில் பல நேரங்களில் ட்ரோனும் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்ததோடு அதனை இணையத்திலும் பதிவிட்டுள்ளார்.

  தற்போது இந்த வீடியோவைப்பார்த்த நெட்டிசன்கள் பல கருத்துகளை கலாய்தத்துப் பதிவிட்டுவருகின்றனர்.” குறிப்பாக நிலம், கடல், ஆகாயம் …. இன்னும் சொன்னால் வேற்று கிரகத்தையும் விட்டு வைப்பதில்லை மனிதனின் சுயநலம்..”. அவ்வளவு தான் இனிமேல் காகங்களுக்கும் அழிவு காலம் ஆரம்பித்துவிட்டது எப்படியும் பறவைகள் அழிந்துவிடும் இதற்குப் பிறகு என்றும் வானில் பறப்பதற்கு பறவைகளுக்கு எந்த சுதந்திரமும் இல்லையோ? என்ற முரட்டு ஃபீலிங் கேள்விகளும் எழுந்துவருகின்றன.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,588FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-