தமிழ் சினிமாவில் திரெளபதி என்ற படம் மூலம் நாடக காதலை அம்பலப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் மோகன் ஜி யின் இரண்டாவது படைப்பாக வெளிவந்துள்ள படம் தான் ருத்ர தாண்டவம்.
இந்த படத்திலும் திரெளபதி பட நாயகன் ரிச்சர்டு ரிஷியே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தவிர கெளதம் மேனன், ராதாரவி, தர்ஷா குப்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பல சர்ச்சைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் வெளியான இப்படம் முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
போதைப்பழக்கம் மற்றும் மத மாற்றத்திற்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது, படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி ருத்ர தாண்டவம் படம் முதல் நாள் மட்டும் 1.6 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். இந்த வசூல் தமிழகத்தில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் திரெளபதி படம் மொத்தமாக 4 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. ஆனால் அந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே 45 லட்சம் ரூபாய் தானாம். திரெளபதியை விட ஒரு நாள் வசூல் அதிகம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
#RudraThandavam grossed close to 1.6 CR on its opening day in TN. Truly FANTASTIC start👌🔥
— Kaushik LM (@LMKMovieManiac) October 2, 2021