சென்னை: சென்னை மற்றும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசு ஏற்று நடத்த முடிவு செய்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 2 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள 13 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை அந்தந்த மாநில அரசுகளுக்கு வழங்கத் தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை மற்றும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசு ஏற்று நடத்த முடிவு செய்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் அனுப்பிய கடிதத்தில், சென்னை மற்றும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகளை ஏற்று நடத்த தமிழக அரசு கொள்கை முடிவு மேற்கொண்டுள்ளது . அவ்வாறு தமிழக அரசு ஏற்று நடத்தும்பட்சத்தில், இரு கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் 85% தமிழக அரசுக்கும், எஞ்சிய 15% அனைத்திந்திய அளவுக்கும் ஒதுக்கீடு பகிரப்படும். தமிழக அரசின் இந்த முடிவை, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் ஏற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் பிரதமர் மோடியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மருத்துவ சேவையும், காப்பீடும் வழங்குவதற்காக இ.எஸ்.ஐ சார்பில் நாடு முழுவதும் 21 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவற்றில் 11 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு கல்லூரி சென்னையில் செயல்படுகிறது. கோவையில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு திறக்கப்படவில்லை. ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், நிதி நெருக்கடி காரணமாக மருத்துவக் கல்லூரிகளை மூட இ.எஸ்.ஐ., முடிவு செய்திருந்தது.
இ.எஸ்.ஐ. கல்லூரிகளை அரசே ஏற்று நடத்த முடிவு: முதல்வர் கடிதம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week