November 27, 2021, 5:44 am
More

  வாக்கு, சாக்கு, போக்கு.. மொத்தத்தில் எல்லாம் மொட்டை!

  Rameswaram
  Rameswaram

  தமிழகத்தில் உள்ள கோயில்களில் மொட்டையடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது என பேரவையில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

  2021 – 2022 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது , இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

  அதில், தமிழகத்தில் உள்ள அறநிலையத் துறையின் கீழ் இருக்கும் எந்தக் கோயிலிலும் இனி, மொட்டை அடிக்க பக்தர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார்.

  mottai in kovil
  mottai in kovil

  ஆனால் இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வந்த பக்தர்கள் மொட்டை அடிக்க 300 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  மகாளய அமாவசை என்பதால் ராமேஸ்வரத்திற்கு வந்திருந்த பக்தர்கள் தங்களின் முன்னோர்களை வழிபட்டு பின் மொட்டை போட்டு கொண்டனர். பக்தர்களுக்கு மொட்டை போட 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை கட்டணமாக கட்டாய வசூல் செய்யப்பட்டுள்ளது.

  மொட்டை போட அரசு இலவசம் என அறிவித்துள்ளதே எனக் பக்தர்கள் கேட்டதற்கு அக்னி தீர்த்த கடற்கரையில் போட்டால்தான் இலவசம் என்றும் மற்ற இடங்களில் போட்டால் காசு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

  செய்வதறியாத பக்தர்கள் கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டு மனவேதனையுடன் சொந்த ஊருக்குச் திரும்பி சென்றனர்.

  mottai
  mottai

  இந்நிலையில் அப்பகுதியில் பணியில் இருந்த காவலர்கள், அதிக கட்டணம் வசூல் குறித்து மொட்டை போடும் நபர் (சவரத்தொழிலாளி) களிடம் கேட்டதற்கு பதில் கூறாமல் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்று அதே கட்டணத்தை வசூல் செய்து மீண்டும் வேறு நபர்களுக்கு மொட்டை போட்டு உள்ளார்.

  இதுகுறித்து திருக்கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, திருக்கோவில் பணியாளர்கள் யாரும் இன்று மொட்டை போடவில்லை, வெளி நபர்கள் சிலர் மொட்டை போட்டுள்ளனர்.

  இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காது எனவும் அது போன்ற தவறுகள் நடைபெறுவதாகத் தகவல் வந்தால் காவல்துறை மூலம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

  திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து அறநிலைத்துறை சார்பில் இந்துக்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

  அதிலும் குறிப்பாக, இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அந்தந்த கோயில்களில் பக்தர்கள் செலுத்திய தங்க வைர வெள்ளி நகைகளை எடுத்துச் சென்று உருக்கி வைப்பதாக கூறும் திட்டம் இந்துக்களிடையே அதிருப்தியையும் பக்தர்களிடையே மனக்கசப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

  பிற மத பண்டிகைகளுக்கு ஆதரவு அளித்தும், பிறமத வழிபாட்டு தலங்களுக்கு வெள்ளி ஞாயிறு அனுமதி அளிக்கப்படுவதும், இந்து கோவில் பண்டிகைகளை முடக்கி போடுவதும் அனுமதி மறுப்பதும், மக்களை வழிபாட்டு தலங்களுக்கு பண்டிகை காலங்களில் அனுமதிக்காததும், என இந்து விரோத தீமையை வெளிப்படையாகவே செயல் படுத்தும் அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளதை மக்கள் நன்கு தெரிந்து கொண்டனர். சிறுபான்மை ஆதரவு தன்மை என்ற பெயரில் இந்திய இறையாண்மைக்கும் இந்துக்களுக்கு எதிரான செயல்பாடுகளும், அதிகரித்து இந்து கோவில்களை கையகப்படுத்தி செய்து வரும் செயல்பாடுகள் ஒட்டுமொத்த இந்துக்களையும் மனக்கசப்பிற்கு ஆளாக்கியுள்ளது‌.

  rameswaram
  rameswaram

  தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கப்பட்ட நீட் விலக்கல், பெட்ரோல் டீசல் விலைக்குறைப்பு, நகைக்கடன் தள்ளுபடி, குடும்பதலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய்… இப்படி பல வாக்குறுதிகளில்‌… ‘மொட்டை’ என்ற சாராம்சம் அடிநாதமாக இருக்கின்றது. கொடுத்த வாக்கு… அதற்கு ஆயிரம் சாக்கு… போகின்ற போக்கு.. மொத்தமாக எல்லாமே மொட்டையோ என கலக்கத்தில் மக்கள்.

  இந்நிலையில் திருக்கோயில்களில் முடிகாணிக்கை செலுத்த இனி கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவித்தும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பொது மக்களிடையேயும் பக்தர்களிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,110FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,736FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-