spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?சிக்கென பிடித்து அன்பை காட்டும் சீல்! வைரல்!

சிக்கென பிடித்து அன்பை காட்டும் சீல்! வைரல்!

- Advertisement -
seal
seal

நம்மை போலவே, விலங்குகளுக்கும் அரவணைப்பு தேவை. அவர்களும் அன்புக்கு அடிமை தான். நாம் அன்பை கொடுக்கும், போது, அவையும் அன்பை திருப்பி அளிக்கின்றன.

அதனை மீண்டும் உறுதிபடுத்தும் வகையில் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு துடுப்புகாலி (Seal )ஒன்று, ஸ்கூபா டைவரை கட்டிப்பிடிப்பது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

இருவருக்கு இடையிலான அன்பை வெளிப்படுத்தும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
வைரலாகும் வீடியோவில், ஒரு காட்டு சாம்பல் முத்திரை ஸ்கூபா டைவர் வரை நீந்தி அவரை நீருக்கடியில் கட்டிப்பிடித்தது.

ஆழமான கடல் நீரில் துடுபுகாலி ஸ்கூபா டைவரை கட்டி அணைத்ததும், அவர் அதன் முதுகில் தடவிக் கொடுப்பதையும் காணலாம். மேலும், வீடியோவில், சீல் ஸ்கூபா டைவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, என்னுடன் வா என்பது போல் இழுப்பதையும் காணலாம்.

வீடியோவில் காணப்படும் பர்வில் (Burville ) ஒரு ஸ்கூபா டைவர் என்பதோடு மருத்துவரும் ஆவார். அவர் கிட்டத்தட்ட 20 வருடங்களாக வட கடலின் அந்த பகுதியில் ஸ்கூபா டைவிங் செய்து வருவதாகவும், இதன் விளைவாக அங்கிருக்கும் சீல் என்னும் துடுப்புகாலிகளுடன் தனக்கு நல்ல பழக்கம் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

துடுப்புகாலிகள் (Pinnipeds) எனும் கடல் பாலூட்டிகள், துடுப்புகள் போன்ற நான்கு கால்களை பயன்படுத்தி கடலில் நீந்தும் திறன் பெற்ற கடல் வாழ் விலங்கினம். துடுப்புகாலிகள் சில நேரங்களில் கடற்கரையிலும் தவழ்ந்து வந்து ஓய்வெடுக்கும். துடுப்புகாலிகளில் 33 வகையான இனங்கள் உள்ளது. துடுப்புகாலிகள் அதிகம் வேட்டையாடப்படுவதால், இவ்வினம் அழிவின் விளிம்பில் உள்ளதாக விலங்கியல் ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe