Home அடடே... அப்படியா? தீபாவளி பண்டிகை: இரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!

தீபாவளி பண்டிகை: இரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!

train

தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் வசதிக்காக இரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

வண்டி எண் 02694 தூத்துக்குடி – சென்னை எழும்பூர் முத்துநகர் சிறப்பு ரயிலில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 7 வரையும் மற்றும் வண்டி எண் 02693 சென்னை எழும்பூர் – தூத்துக்குடி முத்துநகர் சிறப்பு ரயிலில் நவம்பர் 2 முதல் நவம்பர் 10 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

வண்டி எண் 02633 சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி சிறப்பு ரயிலில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 8 வரையும் மற்றும் வண்டி எண் 02634 கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலில் நவம்பர் 1 முதல் நவம்பர் 9 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

வண்டி எண் 02206 ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 10 வரையும் மற்றும் வண்டி எண் 02205 சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சிறப்பு ரயிலில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 13 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

வண்டி எண் 06851 ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரையும் மற்றும் வண்டி எண் 06851 சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சிறப்பு ரயிலில் நவம்பர் 1 முதல் நவம்பர் 3 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

வண்டி எண் 06723 சென்னை எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி சிறப்பு ரயிலில் நவம்பர் 1 முதல் நவம்பர் 11 வரையும் மற்றும் வண்டி எண் 06724 கொல்லம் – சென்னை எழும்பூர் அனந்தபுரி சிறப்பு ரயிலில் நவம்பர் 2 முதல் நவம்பர் 12 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

நவம்பர் 2ஆம் தேதி அன்று கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் வண்டி எண் 06618 கோயம்புத்தூர் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மற்றும் ராமேஸ்வரத்திலிருந்து நவம்பர் 3ஆம் தேதியன்று புறப்படும் வண்டி எண் 06617 ராமேஸ்வரம் – கோயம்புத்தூர் சிறப்பு ரயில் ஆகியவற்றில் ஒரு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version