
இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் ஜியோபோன் நெக்ஸ்ட் (JioPhone Next), சந்தைக்கு வரும் முன்பே, ஜியோபோன் நெக்ஸ்ட் தொலைபேசிகள் தொடர்பான போலி இணைப்புகள் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிலையன்ஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள ஜியோபோன் நெக்ஸ்ட் (JioPhone Next) போன் இன்னும் சந்தைக்கு வருவதற்கு முன்பே, அந்த போனைக் குறித்து சில அன்பாக்சிங் வீடியோக்கள் யூடியூப் சேனலில் (Youtube Channel) வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் இது தான் “ஜியோபோன் நெக்ஸ்ட்” எனக்கூறி பேக் செய்யப்பட்ட பாக்ஸில் இருந்து ஒரு புதிய போன் காண்பிக்கப்படுகிறது. “ஜியோபோன் நெக்ஸ்ட்” தொலைபேசியின் மாதிரி போல இருக்கும் போன், சார்ஜர் உட்பட பாக்ஸில் இருக்கும் பொருட்களை குறித்து விவரங்கள் காட்டப்படுகின்றன.
அதாவது ஒரு புதிய போன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதுக்குறித்து மதிப்பாய்வு செய்யும் பல வீடியோக்கள் யூடியூப் சேனல் உட்பட சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவது வழக்கம். ஆனால், இன்னும் சந்திக்கு வராத ஜியோபோன் நெக்ஸ்ட் குறித்து மதிப்பாய்வு செய்யும் வீடியோக்கள் யூடியூப் சேனலில் வெளிவந்துள்ளன.
ஜியோ தனது ஜியோபோன் நெக்ஸ்ட் தயாரிப்பது தொடர்பான குறும்படத்தை வெளியிட்டது. அந்த வீடியோவையும், போலி வீடியோவையும் (Fake Video) இணைத்து பார்த்தால் உண்மைத் தன்மை தெரியவரும்.
இந்த வீடியோக்கள் முற்றிலும் போலியானது என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Limited) ) நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் போலி வீடியோக்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
தற்போது எங்கள் தரப்பில் இருந்து போன் அறிமுகப்படுத்தப்படவில்லை. இது இன்னும் சந்திக்கும் வரவில்லை. அப்படி இருக்கையில், டெலிவரி எப்படி நடக்கும்? நீங்கள் இந்த ஃபோனை வாங்க விரும்பினால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரை காத்திருக்கவும் எனவும் ரிலையன்ஸ் ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகம் தொடர்பான எந்த தேதியையும் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. ஆனால் அடுத்த தீபாவளிக்கு ஜியோபோன் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவிலேயே மலிவான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் டிஜிட்டல் மாற்றத்திற்கான அடித்தளமாக ஜியோபோன் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜியோபோன் நெக்ஸ்ட் (JioPhone Next) ஸ்மார்ட்போனின் விலை ரூ. 3499 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.