Home அடடே... அப்படியா? பூமியை சிறுகோளிடமிருந்து காக்க நாசா திட்டம்!

பூமியை சிறுகோளிடமிருந்து காக்க நாசா திட்டம்!

space 1
space 1

அடுத்த ஆண்டு, நாசா விண்கல மோதல் சோதனையில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.

மணிக்கு 15,000 மைல் (24,000 கிமீ) வேகத்தில் செல்லும் விண்கலத்தை மோதி அழிக்கச் செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.

வருங்காலத்தில் பூமி மீது மோதி அச்சுறுத்த வாய்ப்புள்ள ஒரு சிறு கோளின் போக்கைத் திசைதிருப்ப இந்த ஒத்திகை நல்ல வழிதானா, பலன் கொடுக்குமா என்பதை, இந்த மோதல் ஆய்வு மூலம், நாசா பிராக்டிக்கலாக செய்து பார்க்க உள்ளது.

330 மில்லியன் டாலர் மதிப்பில் DART என்ற அழைக்கப்படும் இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

DART விண்கலம் கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளிப் படை தளத்தில் இருந்து நவம்பர் 23 அன்று பசிபிக் நேரப்படி இரவு 10:20 மணிக்கு SpaceX Falcon 9 ராக்கெட்டில் ஏவப்பட உள்ளது. பூமியிலிருந்து 6.8 மில்லியன் மைல் தொலைவில் உள்ள சிறுகோள் தாக்கம் செப்டம்பர் 26 மற்றும் அக்டோபர் 1 க்கு இடையில் ஏற்படும்.

நாசாவின் கிரக பாதுகாப்பு அதிகாரி ஜான்சன் இதுபற்றி கூறுகையில்,, பூமிக்கு அருகிலுள்ள 27,000 க்கும் மேற்பட்ட சிறுகோள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆனால் தற்போது எதுவும் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருந்த சோதனைகளை செய்து பார்க்க உள்ளோம் என்றார்.

ஒரு சிறுகோள் பூமியை நோக்கிச் சென்றால், அதைத் திசைதிருப்ப எவ்வளவு வேகம் தேவை என்பதை அறிவியலாளர்கள் புரிந்துகொள்ள உதவும் வகையில் இந்த சோதனை வடிவமைக்கப்பட்டுள்ளது. திசைதிருப்பலின் அளவு சிறு கோள் எவ்வளவு நுண்துளைகள் கொண்டது என்பதை பொருத்து மாறுபடுமாம்.

கோள் மீது டார்ட் விண்கலம் இந்த மோதலின்போது, 1,210 பவுண்டுகள் எடையுள்ளதாக இருக்கும். இது அந்த சிறுகோளை அழிக்காது. அதேநேரம், பூமியை நோக்கி வரும் கோள் பாதையை திருப்பி விட்டு பூமியை ஆபத்திலிருந்து காப்பாற்றும் என்று, விஞ்ஞானி சாபோட் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version