― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?ஜார்ஜ் பொன்னையா விவகாரம்: ருத்ர தாண்டவத்தை முன்நிறுத்தி நீதிபதி தீர்ப்பு!

ஜார்ஜ் பொன்னையா விவகாரம்: ருத்ர தாண்டவத்தை முன்நிறுத்தி நீதிபதி தீர்ப்பு!

- Advertisement -

ருத்ர தாண்டவம்’ படத்தை முன்வைத்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டி தீர்ப்பு அளித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

நாடக காதல் கதைகளாத்தை மையமாக வைத்து ‘திரெளபதி’ படத்தை இயக்கிய மோகன் ஜி அதையடுத்து மதமாற்ற அரசியல் கதைக்களத்தில் ‘ருத்ர தாண்டவம்’ படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் இரண்டாவது முறை ரிச்சர்ட் ரிஷியுடன் அவர் கூட்டணி அமைத்தார். படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

ருத்ர தாண்டவம் படத்தில் கிறிஸ்தவர்களாக மாறிய பின்னரும் சலுகைகளுக்காக பழைய மதத்தின் அடையாளத்தையே பயன்படுத்தும் அரசியலை காணிப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல கருத்துக்கள் எழுந்தன.

இந்நிலையில் கிறிஸ்துவ மதபோதகர் ஜார்ஜ்பொன்னையா கைது விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதிபதி ருத்ரதாண்டவம் படத்தையும் ருத்ரதாண்டவம் படத்தில் வரும் கிரிப்ட்டோ கிறிஸ்டியன் வசனத்தையும் சுட்டிக்காட்டி தீர்ப்பு கொடுத்துள்ளார்.

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான மத நம்பிக்கையை சீர்குலைத்தல், இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்குதல், பிரிவினையைத் தூண்டுதல் ஆகிய குற்றங்களுக்காக இபிகோ 295(ஏ), 153(ஏ) மற்றும் 505(2) பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தது செல்லும்.

இப்பிரிவுகளை ரத்து செய்ய முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கூறியுள்ளார். இறுதித் தீர்ப்பு நாளின் போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, அமைச்சர் சேகர்பாபுவுக்கு மட்டுமல்ல, மனோ தங்கராஜுக்கும் சேர்த்து சொல்கிறேன்.

எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தினாலும், எத்தனை கோவிலுக்கு துணி உடுக்காமல் போய் சாமி கும்பிட்டாலும், ஒருவர் கூட ஓட்டு போடப் போவதில்லை என்று கூறினார்.

மண்டைக்காடு அம்மனின் பக்தர்களும் ஓட்டு போடப் போவதில்லை. ஹிந்துக்களும் ஓட்டு தரப்போவது இல்லை. நீங்கள் வெற்றி பெற்றீர்கள் எனில் அது கிறிஸ்துவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சை என்று கூறினார்.

பூமாதேவியை மிதிக்கக் கூடாது என்பதற்காக பாஜக எம்எல்ஏ காந்தி செருப்பு போட மாட்டாராம். நாம் பாரத மாதாவின் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்காக செருப்பு போட்டு மிதிக்கிறோம் என்றும் அடாவடியாக பேசினார்.

தொடர்ந்து அவர் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது பேச்சு பாஜகவினரிடையே மட்டுமல்லாது பெரும்பாலான இந்துக்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். இந்த வழக்கில் ஜாமீன் வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதனையத்து அவருக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி உயர்நீதி மன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

இதனிடையே இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜார்ஜ் பொன்னையா, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது உத்தரவில், மக்கள் நிலத்தை பூமித்தாயாக வணங்கி வருகின்றனர்.

மனுதாரர் கூட்டததில் பேசும்போது பூமித்தாயை அவதூறாகப் பேசியுள்ளார். இந்து மதத்தினரின் மத நம்பிக்கையைத் தவறாகப் பேசியுள்ளார்.

இரு மதங்களுக்கு இடையில் மோதலையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். மனுதாரர் பேசிய கூட்டம் அனுமதி பெற்று நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தால் கொரோனா தொற்று பரவல் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மத்தியிலும் அவர் பேசவில்லை. எனவே, மனுதாரர் மீதான இபிகோ 269, 143, 506(1) மற்றும் தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டப்பிரிவு 3-ன்கீழ் வழக்குப் பதிவு செய்தது செல்லாது. இதனால் இப்பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன.

மத நம்பிக்கையை சீர்குலைத்தல், இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்குதல், பிரிவினையைத் தூண்டுதல் ஆகிய குற்றங்களுக்காக இபிகோ 295(ஏ), 153(ஏ) மற்றும் 505(2) பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தது செல்லும்.

இப்பிரிவுகளை ரத்து செய்ய முடியாது. சமீபத்தில் பால்ஜான்சன் என்பவர் எழுதியிருந்த புத்தகத்தைப் படித்தபோது, அதில் ஒரு நம்பிக்கையாளரின் சுய வாழ்க்கை வரலாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் அன்பானவர்களே, நாம் ஒவ்வொருரையும் நேசிக்க வேண்டும். ஏனென்றால் அன்பு, நேசம் என்பது கடவுளிடம் இருந்து வருகிறது. யார் நேசிக்கிறார்களோ அவர்கள் கடவுளுக்குப் பிறந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் உலகம் தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்பு தலைவர் டெஸ்மவுண்ட் டுடுவை இழந்து வாடியது. அதுகுறித்து கோபாலகிருஷ்ண காந்தி எழுதிய இரங்கல் செய்தியை, மனுதாரர் படிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும், கிறிஸ்துவத்துக்கு எதிரான செயல்களைச் செய்ததற்காக இறுதித் தீர்ப்பு நாளின் போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் எனக் கருதுகிறேன் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

“இந்திய சினிமாவில் ஒரு படத்தை முன் வைத்து நீதிமன்றம் கூறும் பெரிய தீர்ப்பு இது என்ற பெருமையை தேடிதந்த ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி.” என்று ருத்ர தாண்டவம் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version