சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலம் தை மாதமாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அதற்கேற்ப தை மாதப்பிறப்பே சிறப்பானதுதான். தமிழ் மாதங்களில் தை மாதத்திற்கு என தனி சிறப்பு உண்டு. இந்த தை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றி பார்ப்போம்.
தை மாதம் பிறந்தவர்களின் குணநலன்கள்
தை மாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த சிந்தனையாளர்களாகவும், கற்பனை திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சிறிது கஞ்ச பேர்விழிகள். இவர்கள் மிகவும் கஞ்சத்தனமாக இருப்பதால் மற்றவர்களுக்கு அதிகம் உதவி செய்யமாட்டார்கள்.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிகம் யாருடனும் நெருங்கிப் பழக மாட்டார்கள். இவர்கள் மனதில் ஒன்று வைத்துக் கொண்டு புறம் ஒன்று பேசத் தெரியாதவர்கள்.
இவர்கள் தன்னை நம்பி வந்தவர்களை காக்கும் குணம் கொண்டவர்கள். விடா முயற்சி, கடுமையாக உழைக்கக் கூடிய ஆற்றல், சிந்திப்பதற்கான ஆற்றலை இயற்கையிலேயே கொண்டு இருப்பார்கள். அதனால் கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விடாமல் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள்.
இவர்கள் தனக்கு பிடித்த ஒரு பொருளையோ அல்லது பிடித்த ஒரு நபரையோ பற்றி அடிக்கடி பாராட்டிப் பேசிக்கொண்டே இருப்பார்கள். வருமானத்திற்கு ஏற்ப தான் செலவு செய்வார்கள். வேலை என வந்துவிட்டால் புத்திசாலித்தனமாகவும், கெட்டிக்காரர்களாகவும் செயல்படுவார்கள்.
உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்து கொள்வார்கள். தனக்கு வேண்டியதை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பர். அதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
இவர்களுக்கு காதல் திருமணம் சரிபட்டு வராது. இவர்களை நம்பி எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது இவர்களை நம்பி ஒரு காரியத்தில் இறங்குவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம். இவர்களின் பேச்சு வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதுபோல் இருக்கும்.
இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்ல வேண்டும், இல்லையென்றால் அவர்களின் விருப்பத்திற்கே அவர்கள் நடந்து கொள்வார்கள். இவர்கள் குடும்பத்தாருடன் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனுசரித்துப் போகும் தன்மையுடையவர்கள்.
தை மாதத்தில் பிறந்த பெண்கள் அழகாக இருப்பார்கள். தை மாதத்தில் பிறந்தவர்களுக்கு உடன்பிறந்தவர்கள் இருப்பது மிகவும் அரிதான விஷயமாகும். ஏனெனில் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வீட்டிற்க்கு ஒரே பிள்ளையாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
வீடு, வாசல், ஆபாரனங்கள் போன்ற அசையா சொத்துகள் பரம்பரை பரம்பரையாக வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆனாலும் இவர்கள் சுயமாக சம்பாதித்து சொத்து சேர்ப்பார்கள். எந்த விஷயத்திலும் அவசரப்படாமல் சிந்தித்து செயல்படுவார்கள். பயணம் செய்வது என்பது இவர்களுக்கு விருப்பமான ஒன்று. ஆடை, ஆபரணங்கள் சேர்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்கள். இவர்களுக்கு நல்ல அறிவும், ஆற்றலும், அழகும் உள்ள வாழ்க்கைத் துணை அமையும்.
இவர்கள் தை மாதத்தில் பிறந்ததால், ஏற்ற தொழில் விவசாயம் தான். ஆனால் பொறியியல், விஞ்ஞானம், அறிவியல் என பல துறைகளில் சிறப்பாக செயல்படுவார்கள். சுய தொழில் செய்வதில் அதிக விருப்பம் உள்ளவர்களாக இருப்ப்பார்கள்.