― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?ரியல்மி 9ஐ: சிறப்பம்சங்கள்...!

ரியல்மி 9ஐ: சிறப்பம்சங்கள்…!

- Advertisement -

ரியல்மி 9 தொடரின் சமீபத்திய ஸ்மார்ட்போனான ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.

பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்களுடன் இந்த சாதனம் சமீபத்தில் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மி 9ஐ சாதனத்தின் இந்திய மாறுபாடு இந்த மாடலை போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும் என வெளியீட்டு தேதியை வெளிப்படுத்திய டீசர் தகவல்கள் கூறுகிறது.

ரியல்மி 9ஐ சில அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 செயலி மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதே சிப்செட் உலகளாவிய மாறுபாட்டிலும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே உடன் முழு எச்டி+ ரெசல்யூஷன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்டை பயன்படுத்தி 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யுஐ 2.0 மூலம் இயங்குகிறது.

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இருக்கிறது. இது சிறந்த ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் கொண்டிருக்கிறது.

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் இரட்டை 2 எம்பி சென்சார்கள் என மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மிட் ரேஞ்ச் விலைப் பிரிவில் கிடைக்கும் சிறந்த கேமரா அமைப்பு கொண்ட ஸ்மார்ட்போன் இதுவாகும்.

ரியல்மி ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி மற்றும் வசதிக்கென 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ரியல்மி 9ஐ குளோபல் மாறுபாட்டின் இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் இரட்டை சிம் கார்ட் ஸ்லாட், 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5.0 மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ.15000 என்ற விலைப்பிரிவு சாதனத்துடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனின் இந்திய விலை குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் வியட்நாமில் இந்திய விலை மதிப்புப்படி ரூ.20,500 ஆக இருந்தது. ஆனால் ரியல்மி 9ஐ சாதனத்தில் இந்திய மாறுபாட்டு விலை ரூ.13,999 மற்றும் ரூ.14,499 ஆக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version