
உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அப்போது உடன் இருந்தார்.
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், வரும் சட்டமன்றத் தேர்தலில் கோரக்பூர் நகர்ப்புறத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி ஆதித்யநாத், 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதனால் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிச் சட்ட மேலவை உறுப்பினர் ஆனார்.
வரும் தேர்தலில் கோரக்பூர் நகர்ப்புறத் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.