ஏழு வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு…

Published:

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை திங்கட்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 12,838 பதவிகளுக்கு தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. தோ்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக, தருமபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை (பிப்22) நடைபெற்று உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்
சென்னை மாநகராட்சி திருமங்கலம் ஜெயங்கொண்டம் திருவண்ணாமலை நகராட்சிகளில் ஐந்து வார்டுகளில் உள்ள ஏழு வாக்குச்சாவடியில்
நாளை திங்கட்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

16 32 57 ele - 2026

Related articles

Recent articles

spot_img