ருமேனியாவில் இருந்து 200 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானப்படை விமானம் இன்று இரவு 11 மணிக்கு வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது. விமானப்படையின் சி 17 விமானம் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான 4 விமானங்களையும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. போலந்து ஹங்கேரியிலிருந்து புறப்படும் சி17 விமானங்கள் நாளை காலை இந்தியா வந்தடையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுவரை 144 தமிழக மாணவர்கள் உக்ரைனில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைனில் உள்ள மாணவர்களுடன் பேச வசதியாக வாட்சப் அப் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்பதற்கான ஒருகிணைப்பு சிறப்பு அதிகாரி ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.
