ஆவின் பொருட்கள் விலை உயர்வை தொடர்ந்து இன்று முதல் டாஸ்மாக் மதுபான விலையும் அதிகரிப்பு…

Published:

சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் ஆவின் தயாரிப்புகள் விலை உயர்ந்த ததை தொடர்ந்து மதுவிலக்குஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்துவதால் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளது.

images 44 - 2026

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் (டாஸ்மாக்) நடத்தி வருகிறது.கடந்த 2 ஆண்டுக்கு முன் தமிழகத்தில் மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டது

இந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பானங்களின் விலை இன்று முதல் ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி டாஸ்மாக் மது பானங்களுக்கு குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.10, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.20, ஆஃப் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.20, மீடியம் மற்றும் உயர்ரக மது பானங்களுக்கு ரூ.40, புல் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.40, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.80 வரையும்  உயர்த்த பட்டுள்ளது. பீர் வகைகளுக்கு ரூ.10 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஒரு நாளைக்கு மது வகைகளுக்கு ரூ.10.35 கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளது. பீர் வகைகளுக்கு ஒரு நாளைக்கு 1.76 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 4,396 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் வாய்ப்புள்ளது. டாஸ்மாக் மதுபான விலை உயர்வால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Related articles

Recent articles

spot_img