ஜெயலலிதா மரணம் குறித்து மீண்டும் துவங்கிய விசாரணை…

Published:

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் கமிஷன் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணையை‌ தொடங்கியது.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களும் காணொலி மூலமாக இன்றைய விசாரணையில் பங்கேற்றனர்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமி‌ஷன் விசாரணை நடத்தி வந்தது.ஜெயலலிதாவோடு தொடர்புடையவர்கள், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உள்ளிட்ட பலரிடம் பல்வேறு கட்ட விசாரணை நடந்துள்ளது.

2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆறுமுகசாமியின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. அதன்பின்னர் மீண்டும் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணை தொடங்கியது. விசாரணையில் பங்கேற்க அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்பேரில் இன்று காலையில் 5 டாக்டர்கள் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார். நாளை 6 மருத்துவர்கள் ஆஜராகிறார்கள்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

விசாரணையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களும் காணொலி மூலமாக இன்றைய விசாரணையில் பங்கேற்றனர்.

images 45 - 2026

Related articles

Recent articles

spot_img