திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள சொரகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ். இவருக்கும் ஏழுமலை என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று புதன்கிழமை சரண்ராஜை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்ற ஏழுமலை, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்தின்போது, சரண்ராஜை காப்பாற்ற முயன்ற ரேணுகோபால் என்பவரும் உயிரிழந்தார். முன்விரோதத்தால் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவரும், காப்பாற்ற முயன்றவரும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீசார் இன்று தீவிர விசாரணை நடத்தினர்
திருவண்ணாமலை அருகே முன்விரோதத்தால் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவரும், காப்பாற்ற முயன்றவரும் பலி ..


