இளம் விஞ்ஞானி ஆகவேண்டுமா?

Published:

இளம் விஞ்ஞானி’ பயிற்சிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது.

பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை உருவாக்கும் நோக்கில் ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு செய்முறை விளக்கப் பயிற்சிகள் வழங்கப்படும். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தலா 3 அல்லது 4 பேர் என மொத்தம் 150 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இஸ்ரோவின் 4 மையங்களில் மே 16 முதல் 28ம் தேதி வரை மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

விருப்பம் உள்ளவர்கள் www.isro.gov.in என்ற இணையதளம் மூலமாக ஏப்.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்கள் பட்டியல் ஏப்.20ம் தேதி வெளியிடப்படும்.

இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 080 2217 2119 என்ற தொலைபேசி எண் அல்லது yuvika@isro.gov.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Related articles

Recent articles

spot_img