ஊட்டி அருகே கூடலூர் வனப்பகுதியில், கோடை வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. வறட்சியில், வனத்தீ ஏற்பட்டு புல்வெளிகள் எரிந்து நாசமாகி வருகிறது. இந்நிலையில், ஆமைகுளம் அரசு கல்லூரியை ஒட்டிய வனப்பகுதியில், இன்று மணிக்கு வனத்தீ ஏற்பட்டது. வன ஊழியர்கள், இளைஞர்கள் மற்றும் கல்லூரி உதவி பேராசிரியர்கள், காட்டுதீ, கல்லூரி வளாகத்திற்கு பரவுவதை தடுக்கும் வகையில், தீயை கட்டுப்படுத்தினர். ஆனாலும், காட்டுதீயில் நான்கு ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி எரிந்து நாசமானது. காட்டுதீ ஏற்பட்டது குறித்து வனத்துறை அதிகாரிகள் விரைந்து விசாரித்து வருகின்றனர்,.இதனிடைய பந்தலூர் – கோழிக்கோடு சாலையில் இன்று மதியம் சமூக விரோதிகளால் வனப்பகுதியில் தீ வைக்கப்பட்டதால் பற்றி எரிந்த பலரையும் பதறவைத்தது..
To Read this news article in other Bharathiya Languages
ஊட்டி அருகே பதரவைத்த தீ
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari